Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுமாதிரியான மோசடி ஒன்று சென்னையில் நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே, மோசடி நபர் குறித்து யாருக்குமே சந்தேகம் வரவில்லைகட்டிய மனைவிக்கும்கூட சந்தேகம் வராமல் இருந்துள்ளதுதான், இந்த சம்பவத்தில் ஆச்சரியத்தை தந்து வருகிறது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் பழனி, பன்னீர்செல்வம். இதில் 59 வயதாகும் பழனி, தன்னுடைய அண்ணன் பன்னீர்செல்வம் போலவே இருப்பாராம். பன்னீர்செல்வத்துக்கு 62 வயதாகிறது. இதில் யார் அண்ணன், யார் தம்பி என்று அடையாளம் கண்டுபிடிக்கவே முடியாதாம்.
அச்சு அசல் ஒரேமாதியாக இருப்பதால் நிறைய பேர் அடிக்கடி குழம்பிவிடுவதுண்டு. ஆனால் பழனி பெரிதாக படிக்கவில்லை. வேலையும் சரியாக அமையவில்லை. அதனால், தன்னுடைய அண்ணன் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி வேலை செய்து வந்தார். இதனால் அனைவரும் பழனியை, பன்னீர்செல்வம் என்றே நம்பிவிட்டார்கள்.
இதையே சாதகமாக்கி கொண்ட பழனி, பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே, லூர்து மேரி என்ற பெண்ணை காதலித்தார். 2002ம் ஆண்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சான்றிதழ்களில் பன்னீர்செல்வம் என பெயர் இருக்கிறது. ஆனால் செல்லமாக குடும்பத்தினர் தன்னை பழனி என்று கூப்பிடுவார்கள் என்று லூர்து மேரியை நம்ப வைத்தார்.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் பிறந்தன. ஆனால் தம்பதிகளுக்கிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் வந்தன. திருமணமாகி அடுத்த சில வருடங்களிலிருந்து அதாவது கடந்த 15 வருடங்களாகவே லூர்து மேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் பழனி. ஒருகட்டத்தில், வெறுப்படைந்த மனைவி, தன்னுடைய கணவர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக, பன்னீர்செல்வத்தின் மீது கோடம்பாக்கம் பொலிஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்படி, பொலிஸாரும், பன்னீர்செல்வத்தின் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கும், மகிளா நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடந்து வந்தது.. ஒவ்வொரு முறை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போதும், பன்னீர்செல்வத்தின் பெயரையே பயன்படுத்தி நீதிபதி முன்பு ஆஜராகி வந்தார் பழனி.
மகிளா நீதிமன்றமும் பன்னீர்செல்வத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். இதையடுத்து, 5 ஆண்டு தண்டனை, 3 ஆண்டுகளாக குறைத்து உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது.
பிறகு இந்த உத்தரவையும் எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார் பன்னீர்செல்வம். ஆனால், உச்ச நீதிமன்றம், மேல் நீதிமன்றம் பிறப்பித்த 3 வருட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதற்கு பிறகு, பன்னீர்செல்வத்தை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, கோடம்பாக்கம் பொலிஸார் பன்னீர்செல்வத்தை கைது செய்ய முயன்றனர். ஆனால் நிஜமான பன்னீர்செல்வத்தை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
பொலிஸை பார்த்ததுமே பதறிப்போன நிஜ பன்னீர்செல்வம், என்னை எதுக்காக கைது செய்கிறீர்கள்? என்று கேட்டார். உன் மனைவி தந்த புகாரில்தான் கைது செய்கிறோம் என்றனர். இதைக்கேட்டு அதிர்ந்த பன்னீர்செல்வம், அது நானில்லை, என்னுடைய தம்பி பழனி என்று தெரிவித்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த பொலிஸார் புகார் தந்த லூர்து மேரியேயே நேரடியாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போதுதான், லூர்து மேரியே அதிர்ச்சியில் உறைந்து நின்றார். நிஜ பன்னீர்செல்வத்தை பார்த்ததுமே இவர் தன்னுடைய கணவர் இல்லை என்று சொன்னார். லூர்து மேரி சொன்னதை கேட்டு, பொலிஸார் மேலும் திகைப்பில் நின்றனர்.
பிறகு, பன்னீர்செல்வம் யார்? பழனி யார்? என்ற விசாரணை ஆரம்பமானது. இறுதியில், பன்னீர்செல்வத்தின் தம்பி பழனி என்பதும், 20 வருடங்களாகவே அண்ணன் பன்னீர்செல்வத்தின் சான்றிதழ்களை பயன்படுத்தி வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்ததும், அண்ணன் பெயரை பயன்படுத்தியே, லூர்து மேரியை காதலித்து திருமணம் செய்தது, அண்ணன் பெயரிலேயே பொலிஸாரையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றியது உறுதியானது.
அதுமட்டுமல்ல, தண்டனை உறுதியாகிவிட்டதால், எப்படியும் பொலிஸார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று நினைத்து பழனி தலைமறைவாகியிருக்கிறார்.
இவ்வளவும் விசாரணையில் பொலிஸாக்கு தெரியவந்ததையடுத்து, தீவிரமாக பழனியை தேட துவங்கினார்கள். 5 மாதங்களுக்கு மேல் வலைவீசி தேடி, இறுதியில், மடிப்பாக்கத்தில் பதுங்கியிருந்த போது பழனியை கைது செய்தனர். உருவ ஒற்றுமையை சாதகமாக வைத்துகொண்டு, அண்ணனின் சான்றிதழ்களை பயன்படுத்தி, அண்ணன் பெயரிலேயே காதலித்து பெண்ணை திருமணம் செய்து 20 வருடம் குடும்பமும் நடத்தி ஏமாற்றிய தம்பி பழனி, தற்போது ஜெயிலில் உள்ளார்.
இதில் ஹைலைவெட் என்னவென்றால், தனிப்படை பொலிஸார் 5 மாதங்களாக பழனியை தேடி கொண்டிருந்தபோது, கீழ்க்கட்டளை பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார் பழனி.
அப்போது, இன்னொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்தது. நீதிமன்றத்தில் தனக்கு தண்டனை உறுதியானபிறகும், இந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் பழனி. ஆரம்பத்திலிருந்தே மொத்த தவறுகளையும் செய்துவிட்டு, லூர்துமேரியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டாராம் பழனி.
இதனாலேயே மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார் பழனி. இவரது 2 பிள்ளைகளும்கூட, தன்னுடைய அப்பாவின் பெயர் பன்னீர்செல்வம் என்றே நம்பியிருக்கிறார்கள்.
கடந்த 2002-ல் பன்னீர்செல்வம் என்ற பெயரில் லூர்து மேரியை காதலித்த பழனி, முறைப்படி அவரை திருமணம் செய்யவில்லையாம்.. இருவரும் சென்னையில் குடியேறி குழந்தைகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதனால் குடும்பத்தை விட்டு பழனி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அதனால்தான், லூர்து மேரியிடம் தன்னை பன்னீர்செல்வம் என்று சொல்லி ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
26 Dec 2024