Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 30 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்படும் ‛அக்னிகுல் காஸ்மோஸ்' எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்தது.
சிறிய ரக ரொக்கெட்டுகளை தனியார் பயன்பாட்டுக்கு ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. அந்த வகையில், ‛அக்னிபான் சார்டெட்' என்ற ரொக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்தது.
300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ரொக்கெட் 700 கி.மீ., தொலைவு வரை செல்லக்கூடியது. ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ரொக்கெட் ஏவப்பட இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், செமி கிரையோஜெனிக் மூலம் இந்த ரொக்கெட் இன்று (மே 30) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago