2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

95 வீரர்களுக்கு வீரதீர விருது

Freelancer   / 2025 ஜனவரி 26 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பொலிஸார், தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 942 பேரின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டது. 

இந்த விருதுகள் வீரதீரமாக செயலாற்றியது. மெச்சத்தக்க வகையில் சேவை புரிந்தது மற்றும் மிகச் சிறப்பான பணிகள் என்ற வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொலிஸார், தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் படை வீரர்களின் வீரதீர செயல்கள், மெச்சத்தக்க சேவை, மிகச் சிறப்பான பணி ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் என மொத்தம் 942 விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சனிக்கிழமை (25) அறிவித்தார். 

அவற்றில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 95 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிஆர்பிஎப் வீரர்கள் 19 பேர், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 5 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் மிகத் துணிச்சலாக பணியாற்றி பாதுகாப்பை உறுதி செய்ததற்காக 19 சிஆர்பிஎப் வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .