2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

5 வயது சிறுவன் மீது கூட்டு வன்புணர்வு

Freelancer   / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுவன் இரண்டு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருகையில், கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி, உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் வசிக்கும் 5 வயது சிறுவன் ஒருவனுக்கு, உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதை அவனின் பெற்றோர் கவனித்துள்ளனர். இது குறித்து சிறுவனிடத்தில் பெற்றோர் விசாரணை செய்யவே, அப்போது சிறுவன் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து கூறியிருக்கிறான்.

சம்பவதினம், அர்ஷ் மற்றும் ஜீனை என்ற இரண்டு இளைஞர்கள் சிறுவனை வீட்டிலிருந்து பண்ணை வீட்டிற்கு கடத்தி சென்றதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், இதனை கண்ட ஆடு மேய்ப்பவர்களான ரிஸ்வான் மற்றும் அல்பேஸ் என்ற இரண்டு பேரும் சிறுவனை காப்பாற்றாமல், இதனை காணொளியாக பதிவு செய்து இணையத்தளத்தில் பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட குற்றவாளியின் வீட்டிற்கு சென்ற பெற்றோர் இது குறித்து கேட்டதற்கு, ”இதனை வெளியில் கூறினால், குடும்பத்தையே கொலை செய்து விடுவோம்” என்று அவர்களை மிரட்டிய குற்றவாளிகள், சிறுவனின் குடும்பத்தினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து ஹாபூர் பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், போக்சோ வழக்கின் கீழ் குற்றவாளிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X