Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூன் 24 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதுடெல்லி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வரை, என்ன ஆனாலும் போராட்டத்தை தொடருவேன்” என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் வெற்றுக் குடங்களுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த புதுடெல்லி நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், 4ஆவது நாளான இன்று (ஜூன் 24) எக்ஸ் சமூகவலைதளத்தில் அதிஷி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது உடல் எடை குறைந்துவிட்டது. உடல்ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஹரியானா அரசு தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன். மருத்துவர்கள் எனது உடல்நிலையை பரிசோதனை செய்தனர்” என்று கூறியுள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago