2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை

Freelancer   / 2025 மார்ச் 24 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த இணையவழி விளையாட்டு இணையதளங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு இணையதளங்கள் ஜிஎஸ்டியை பதிவு செய்யத் தவறியதன் மூலம், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைத்து, வரிக் கடமைகளைத் தவிர்த்து வருகின்றன. 

அத்தகைய இணையதளங்களுக்கு எதிரான நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரம் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு  விளையாட்டு இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

மேலும் சட்டவிரோத  விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2,400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம் ரூ.126 கோடி முடக்கப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X