2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்க தடை

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி , மேற்கு வங்காவரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து, ராஜ மகேந்திரவரம், மேற்கு கோதாவரி, மாவட்டம், தனுகு,வேல்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிப்பண்ணைகள் வைக்கவும், கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனை செய்யும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கோழி கடைகளும மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கோழி மற்றும் முட்டைகளை பயன்படுத்தாமல் எச்சரிக்கையாகவும், சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக தமிழ்நாடு,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லொறிகள் மூலம் கொண்டுவரப்படும் கோழி குஞ்சுகள், மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X