2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

200 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

Freelancer   / 2024 மே 23 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பொலிசார், மூன்று பேரை கைது செய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நேற்றிரவு சென்னை போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முத்தாபுதுப்பேட்டை பொலிஸார் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட இரண்டு கார்களை சோதனைக்காக நிறுத்த முயன்றனர். அப்போது அவர்கள், சாலையோரம் காரை நிறுத்துவது போல் நடித்து நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார், அவர்களை 3 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது வெள்ளசேரி அணுகு சாலையில் கார் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து காரை சோதனை செய்தபோது அதில், 200 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குறித்த காரிலிருந்து, 20 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கைப்பற்றிய பொலிஸார், அதை போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த நாகமல்லீஸ் வர ராவ் (32). தன்ராஜ் (28). நூனி (25) ஆகியோரை கைது செய்த பொலிஸார், காரையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து வாங்கிவரப்பட்ட முதல் தர கஞ்சாவை சென்னை, திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புழக்கத்தில் விடுவதற்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .