2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை

1984 கலவர வழக்கு:முன்னாள் எம்.பிக்கு ஆயுள்தண்டனை

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 11:37 - 0     - 13

1984ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு, ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என டெல்லி நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா கடந்த 12ஆம் திகதி அறிவித்தார்.

மேலும், தற்போது திகார் சிறையில் இருக்கும் சஜ்ஜன் குமாரின் உடல் மற்றும் மனநிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக இருந்தால் அதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை இது. 

இந்நிலையில், இந்த வழக்கில், செவ்வாய்க்கிழமை (25) தீர்ப்பளித்த நீதிபதி காவேரி பவேஜா, குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

"அவர் (சஜ்ஜன் குமார்) ஒரு பங்கேற்பாளர் மட்டுமல்ல, கும்பலுக்கு தலைமை தாங்கியவர் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளது” என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X