2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

15 வயது சிறுவனுடன் மாயமான 22 வயது இளம்பெண் கைது

Freelancer   / 2025 ஜனவரி 01 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில், 15 வயது சிறுவனுடன் மாயமான இளம்பெண்ணை, பொலிஸார், போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.

சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வீட்டில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று படித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி, வெளியில் சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் எம்.ஜி.ஆர்., நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையில், சிறுவன் தனக்கு பிரத்தியேக வகுப்பு எடுத்த பெண்ணின் தங்கையான, 22 வயது இளம்பெண் மற்றும் ராகுல் (19 வயது) என்ற இளைஞருடன், பாண்டிச்சேரி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து பாண்டிச்சேரி சென்ற பொலிஸார் மூவரையும் அழைத்து வந்தனர். இதையடுத்து, இளம்பெண் மற்றும் ராகுல் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனும் இளம்பெண்ணும் காதலித்து வந்ததும், அதற்கு ராகுல் உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X