2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

140 சமூக வலைதள பக்கங்கள் மீது வழக்கு

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்பமேளா குறித்து இணையத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக 140 சமூக வலைதள பக்கங்கள் மீது உத்தர பிரதேச பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பெண்களை ஆபாசமான முறையில் சித்தரித்து சில சமூக வலைதள பக்கங்கள் வீடியோக்களை வெளியிட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமூக வலைதளங்களை உத்தர பிரதேச சைபர் க்ரைம் பொலிஸார் தொடர்ந்து கவனமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் மகா கும்பமேளா தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக 140 சமூக வலைதள பக்கங்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகா கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X