2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய மகோற்சவம்

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுசெவ்வாய்க்கிழமை (11)   மாலை முத்துச்சப்ற பவனியும் கல்முனை நகரில் வெகுவிமர்சையாக  இடம்பெற்றது.
 
தரவை சித்தி விநாயகப் பெருமான் யானை மேல் அமர்ந்திருந்து வலம் வந்தார். கல்முனை பிரதான நகர் ஊடாக பாண்டிருப்பு வரையும் இடம் பெற்ற இந்த வீதி உலாவில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜெ.அதிசயராஜ் உட்பட ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
 
இதன் போது கலாச்சார பண்பாடுகளை பிரதிபலிக்கும் மயில் நடனம்,கோலாட்டம், அபிநய ஆட்டங்கள் இடம்பெற்றன.புதன்கிழமை (12) தீர்த்தோற்சவத்துடன்  கொடி இறக்கப்பட்டு வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுபெற்றது.
 
 
ஏ.எல்.எம்.ஷினாஸ்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X