2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

வைகாசிப் பொங்கலுக்கான மடிப்பிச்சை நிகழ்வு

Mayu   / 2024 மே 19 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் பாரம்பரிய வைகாசிப் பொங்கலுக்கான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (20) நடைபெறவுள்ளது.

இதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை (19) ஆலயத்தில் பாரம்பரிய உரலில் நெல் குற்றும் சடங்கும் இடம்பெறும். தொடர்ந்து பொங்கல் இடம்பெற்று பாரிய கடைத்தெரு மற்றும் இறுதி நாள் சடங்கும் இடம்பெறும்.

இச் சடங்கு கடந்த (13) திங்கட்கிழமை மாலை கடல் நீர் எடுத்து,  கல்யாண கால் முறித்து நடுதலுடன் ஆரம்பமானது.

மேலும், (21) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 

எட்டாம்சடங்கு 27ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7மணிக்கு இடம்பெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .