Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி ஞாயிற்றுக்கிழமை ( 8) காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா கடந்த மாதம் 29 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சனிக்கிழமை (07) மாலை வேஸ்பர் ஆராதனையும்,இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தையின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும்,அதனைத்தொடர்ந்து ஆசியும் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .