Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், 'சின்னக்கதிர்காமம்" எனச் சிறப்பித்துக் கூறப்படுகின்றதும், மூர்த்தி,தலம்,தீர்த்தம்,என முறையாக அமையப்பெற்றதுமான வெருகலம்பதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் சனிக்கிழமை (19) வளர்பிறை துதியை திதியும்,உத்தர சட்சத்திரமும்,சித்த யோகமும் கூடிய சுப வேளையில் நண்பகல் 12.03. மணிக்கு இடம்பெற்றது.
மூல மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று கொடி மரத்திற்கு விசேட கிரியைகள் இடம்பெற்றது. மரபு ரீதியான முறையில் ஆலயக் கங்காணம் இராசைய்யா ஞானகணேசன் என்பவரால் கொடிச்சேலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அருள்மிகு கெஜா வல்லி,மஹாவல்லி சமேதமாக ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமியின் கொடியேற்றம் இடம்பெற்றது.
இதன்போது அடியார்களின் அரோகரா கோஷத்துடனும் மங்களவாத்தியம் முழங்க, சிவாச்சாரிய குருமார்களின் வேத மந்திர பாராயணத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் பல பாகத்திலும் இருந்து அதிகளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 18 தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று 6.9.2023 புதன் கிழமை அதிகாலை 4.15 மணிக்கு தீ மிதிப்பு வைபவமும், காலை 7;.10 மணிக்கு புனித கங்கையிலே தீர்தோற்சவமும் நடைபெறும்.
குறித்த ஆலயத்தில் உற்சவ நிகழ்வுகள் யாவும் வேதாகம மாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் அவர்களின் அருள் ஆசியுடன் மகோற்சவ பிரதமகுரு கிரிஹா திலகம் பிரம்மஸ்ரீ.அ.செல்வராஜக் குருக்கள் ஆலய பிரதம சிவஸ்ரீ ச.சிவகுமாரக் குருக்கள் ஆகியோரின் அருளாசியுடன் சசி குழுவின் மங்கள வாத்தியத்துடன் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
வி.ரி. சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago