Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் அனைவரும் செல்வ செழிப்புடன் வாழவேண்டும் என விரும்புவது இயல்பு. இதற்கு நமது வீட்டில் லக்ஷ்மி தேவியின் அருள் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நாம் எப்போழுதுமே செல்வ செழிப்புடன் வாழ சில ஆன்மீக பொருட்கள் பெரிதும் உதவி புரிகின்றது. நமது வீட்டிலும் பண மழை கொட்ட லக்ஷ்மி தேவியை நமது வீட்டுக்குள் அழைத்து வர வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் குபேரர் சிலையை வைப்பது லக்ஷ்மி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒன்றாகும். செல்வத்தை பாதுகாக்கும் கடவுளாக குபேரர் கருதப்படுகிறார்.
சிறிய தேங்காய்கள்
வழக்கமான தேங்காயை விட சின்னதாக இருக்கும். இது ஸ்ரீபால் என்று அழைக்கப்படுகிறது, அதற்கு லக்ஷ்மியின் பழம் என்று அர்த்தம். இந்த தேங்காயை வீட்டுக்குள் வைத்து வழிபடுவது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.
மெர்குரியால் செய்யப்பட்ட சிலைகளும், படங்களும்
மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். உங்கள் வீட்டில் மெர்குரியால் செய்த லக்ஷ்மி சிலைகளை வீட்டில் வைப்பது லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு அழைத்துவரும்.
சோழிகள்
கடலில் இருந்து கிடைக்கிறது லக்ஷ்மி தேவியும் கடலில் இருந்து பிறந்தவர்தான். எனவே, இது உங்கள் வீட்டில் இருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.
விலைமதிப்பற்ற மோதி சங்கு
மந்திர, தந்திரங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இது லக்ஷ்மியின் அருளை உங்கள் இல்லம் தேடி வரவைக்கும்.
வெள்ளியால் செய்யப்பட்ட லக்ஷ்மி
லக்ஷ்மி மற்றும் பிள்ளையார் சிலைகள் அதிக நன்மைகளை வழங்கக்கூடியது. இந்த சிலைகளை தினமும் வழிபடுவது நீங்கள் நினைத்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
தாந்திரீக அறிவியலில் ஸ்ரீ எந்திரம்மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இது எந்திரங்களின் அரசனாக கருதப்படுகிறது. உங்கள் பூஜையறையில் இதனை வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்
தாமரை கட்டா
இது தாமரையில் இருந்து கிடைக்கும் ஒருவகை விதை ஆகும். லக்ஷ்மி தாமரையில் வசிப்பவர் ஆவார், இந்த விதைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலையை வீட்டில் வைத்திருப்பது லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.
ஒரு கண் தேங்காய்
இந்த வகை தேங்காய் தான் பொதுவாக தாந்திரீக செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. மூன்று கண்களுக்கு பதிலாக இந்த தேங்காயில் ஒரு கண்தான் இருக்கும். அதுதான் இதன் சிறப்பு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago