Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரால் வடிக்கப்பட்டு, பர்மாவைச் சேர்ந்த ஊ.பா. கின் அவர்களிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விபாசனா கற்று தந்த திரு ச. கோயங்கா அவர்களால் நடத்தப்படும் மனத்தூய்மைக்கான தியான முறை பற்றி அறிமுகம்.
30ம் திகத புதன்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியும், பிற்பகல் 3.00 மணிக்கு குருநகர் தொடர்மாடி சமூக மண்டபத்திலும் இவ் தியான முறை பற்றி அறிமுகம் செய்யப்படும்.
விபாசனா தியானப்பயிற்சியானது மனிதன் வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் காரணமான கோபம், பொறாமை, தீய எண்ணம், வெறுப்பு, காமம் போன்றவைகளை நீக்கும் பயிற்சி ஆகும். இவ் தியானப்பயிற்சி மூலம் மனித வாழ்க்கையில் மனம், அன்பு, கருணை, நல்ல எண்ணம், பாலிரக்கம் நிறைந்ததாக மாறும் போது நமக்கும் நன்மை தருவதோடு, நம்மை சுற்றியுள்ள அனைவருடனும் ஒத்திசைவுடன் வாழும் அரிய பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தம்மசேது விபாசக மைய ஆசிரியர் அ.சுப்பிரமணியம் விபாசனா ஆசிரியர் ஆர். மோகன் (சென்னை) மற்றும் தம்ம திரிவேணி அறக்கட்டளை குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் இந்த பயிற்சி நெறியை வழங்குகின்றனர். மனத்தூய்மைக்கான இந்த தியான பயிற்சி நெறியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
இதேவேளை, நாவலடி அறியாலை ஜன சமூக நிலையத்தில் 27ம் திகதியும், பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாண (Recca Road)) கலைதூது கலாமன்றத்திலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
எச். எச்.விக்கிரமசிங்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago