2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

முத்தேர்த் திருவிழா ஆரம்பம்

Freelancer   / 2023 ஏப்ரல் 30 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். கே. குமார்

நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழா வைபவம் எதிர்வரும் புதன்கிழமை

 03-05- 2023 முதல் எதிர்வரும் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற இறைவன் திருவருள் பாலித்துள்ளார்.

கிரியாகால நிகழ்வுகள்.

03-05-2023 எதிர்வரும் புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு புண்ணியாகவாசனம் வாஸ்து சாந்தி நடைபெற்று கணபதி ஹோமத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

04-05-2023  வியாழக்கிழமை காலை நவோத்திர சகஸ்ர சத 1008

சங்காபிஷேகமும் மாலை உள் வீதி உற்சவமும் நடைபெறும். காலை 7.00 மணிக்கு பால்குட பவனி நுவரெலியா லேடி மெக்லம் வீதி நீர் வீழ்ச்சியிலிருந்து ஆரம்பமாகும்.பகல் மகேஸ்வர பூஜையினை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.மாலை 5.00 மணிக்கு நித்திய பூஜையுடன் சுவாமிகளின் உள் வீதி ஊர்வலம் நடைபெறும்.

05-05-2023 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் வசந்த மண்டப பூஜை நடைபெற்று முத்தேர் பவனி நகர் ஊர்வலம் ஆரம்பமாகும். 06-05-2023 சனிக்கிழமை தீமிதிப்பும், பிராயசித்த அபிஷேகமும் நடைபெறும்.

07-05-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வைரவர் பூஜையுடன் திருவிழா நிகழ்வுகள் நிறைவுபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X