Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகளின் ஆன்மீக அருளுரைகள் மலையகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (27) ஆரம்பிக்கப்பட்ட அருளுரைகள், செப்டெம்பர் 4ஆம் திகதி வரையிலும் இடம்பெறும்.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் சுவாமி அவர்களின் காலை, மாலை நடைபெறும் இப் புனித நிகழ்வுகளில்; கலந்து கொண்டு இறையருள் பெறுவதோடு சுவாமிகளின் அருளாசிகளையும் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தமிழ் நாடு திருஞானசம்பந்தர் திருமடத்தைச் சேர்ந்த திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீ கார்யம் வாமதேவ தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் கேகாலை மாவட்டத்திலும், கொட்டகலை. ஹட்டன் ஆகிய பகுதிகளிலும் நடைபெற உள்ளது
அரனாயக தமிழ் ஆரம்ப பாடசாலையில் புதன்கிழமை (30 காலை 9.00 மணிக்கும். பூணுகல ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வியாழக்கிழமை (31) பிற்பகல் 2.00 மணிக்கும். வெள்ளிக்கிழமை (01/9) பிற்பகல் 2.00 மணிக்கு கொட்டகல அறநெறி பாடசாலையிலும், சனிக்கிழமை (02/9) காலை 9.00 மணிக்கு ஹட்டன், ஓம் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் தேவஸ்தானம், பன்மூர்பதியிலும், ஞாயிற்றுக்கிழமை (03/9) காலை 9.00 மணிக்கு வரக்கபொல ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்திலும், பிற்பகல் 2.00 மணிக்கு அவிசாவளை அறநெறி பாடசாலையிலும், மற்றும் திங்கட்கிழமை (04/9) பிற்பகல் 2.00 மணிக்கு ரூவான்வெல்ல அறநெறி பாடசாலையிலும், சுவாமிகளின் ஆன்மீக அருளுரைகள் நடைபெறும்.
யட்டியாந்தோட்டை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) எலிஸ்டன் தோட்ட சிவலிங்க பிரதிஷ்டையில் திங்கட்கிழமையும் (28) யட்டியாந்தோட்டை சாந்த மரியால் கல்லூரியிலும், கனேபல்ல ஸ்ரீ துர்க்க அறநெறி பாடசாலையிலும், செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago