Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனிதம் மிகு இம்மாதத்தில் பக்திமணம் கமழும் பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் உலகெங்குமுள்ள பக்தர்கள் இம்மாதத்தை புனிதமாகவும், மிக்க மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகின்றனர். மக்கள் மத்தியில் அமைதி, மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் நிலவவேண்டுமென கிருஷ்ண பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கொட்டாஞ்சனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் இம்மாதம் இந்த விஷேட நிகழ்வுகள் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
ஜூலான் யாத்ரா
இம்மாதம் 16ஆம் திகதி ஜூலான் யாத்ராவும், 19ஆம் திகதி பலராம் ஜெயந்தி தினமும், 26ஆம் திகதி கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவும், அதனை அடுத்த 27 ஆம் திகதி வியாச பூஜையும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இம்மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மேற்படி ஆலயத்தில் பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படும் பக்தி நிகழ்வுகளில் ஒரு பகுதியாக கொண்டாடப்படும் ஜூலான் யாத்ரா விழாவில் பகவான் கிருஷ்ணாவையும், ராதாவையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டும் நிகழ்வு இடம்பெறும். பகவான் கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தும் இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது
பலராம் அவதார தினம்
இம்மாதம் 19ஆம் திகதி திங்கள் கிழமையன்று மேற்படி ஆலயத்தில் பலராம் அவதார தினம் கொண்டாடப்படுகிறது. பலராமர் பகவான் கிருஷ்ணரின் மூத்த சகோதரராக அவதரித்தார். இந்த தினம் பலராமர் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜன்மாஷ்டமி
இம்மாதம் 26 ஆம் திகதி திங்கள் கிழமையன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
எப்பொழுது எங்கு தர்மம் தலை சாய்ந்து அதர்மம் தலையோங்குகிறதோ அப்பொழுது அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகந்தோறும் அவதரிக்கின்றேன் என்று கீதையில் கூறியுள்ளபடி பகவான் கிருஷ்ணர் பக்தர்களை காப்பதற்காக கோலோக விருந்தாவனத்தில் உள்ள தனது சுய உருவில் பூலோகத்தில் எடுத்த அவதாரமே கிருஷ்ண அவதரமாக உலகெங்கும் உள்ள பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
வியாச பூஜை
பகவான் வேதவியாசரின் செய்தியை உலகெங்கும் கொண்டு செல்லும் பிரதிநிதியான ஆன்மீகக் குருவுக்கு நடத்தப்படும் பூஜையே வியாச பூஜை எனப்படுகிறது. சர்வதேச கிருஷ்ண பக்தி கழகம் மூலம் உலகெங்கும் கிருஷ்ண பக்தர்களையும் ஆலயங்களையும் உருவாக்கிய ஆன்மீகக் குரு அருட்திரு பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவுக்கு ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணா ஆலயத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று வியாச பூஜை கொண்டாடப்படுகிறது.
மக்கள் இந்த பக்தி மணம் கமழும் விழாக்களில் கலந்து கொண்டு பகவானின் அருட்கடாட்சத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago