Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 17 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பகையில்லா உள்ளம், பட்டினியில்ல வயிறு, நோயில்லா உடல் என மக்களை நடைமுறைபடுத்தி வருபவரும், சித்தர்கள் மகாபொற்சபை மடாலயம் உருவாக்கி சுமார் 23ஆண்டு காலமாக தமிழ் சித்த மரபோடு சித்த மருத்துவம், ஆலயமரபு வழிபாடு, கும்பாபிஷேக பணிகள் மற்றும் யந்திர பூஜைகள் ஆகமவழிபாடு, சித்தர்கள் வழிபாடு அகியவற்றை நடாத்திவரும் சீர்வளர்சீர் குமரவேல் நாயனார், வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் 36 வது ஆண்டு ஆடிப்பூர மகோற்சவத்தில் கலந்து கொள்வதற்காக நாளை செவ்வாய்க்கிழமை (18) தமிழகத்திலிருந்து இலங்கை வருகின்றார்.
மருத்துவமுகாம் அமைத்து மக்களை நல்வழிபடுத்துதல் உடல், மனம் செம்மைப்படுத்துதல், பல கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு இயற்கைவளம் பேணுதல் தொடர்பாக அறிவூட்டுதல். இவர் புனித நதிகள் வழிபாடு, சித்தபுருஷர்களுக்கு குருபூஜை செய்வித்தல், ஆன்மீக பணிகளையும் தேசியசிந் தனையுடன் பல அண்டை மாநிலம் சென்று சமூகசேவையையும் செய்து வருகின்றார்.
சித்தமரபு தமிழ் கலாச்சாரம் பண்டையகால வாழ்வியல்முறைகளை நமது சமூகத்திற்கு எடுத்துரைத்தும், செயல்படுத்திவரும் இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்து, திண்டுக்கல் நகரில் பாரம்பரிய வள்ளுவர் குலத்தொழிலான வாணியல் மருத்துவப் பணிகளையும் மக்களுக்கு எடுத்துச்செல்கின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago