Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 30 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) சிவ தீட்சை வழங்கும் நிகழ்வை சங்கத்தின் உப தலைவர் சைவப் புலவர் சிவானந்த ஜோதி ஞானசூரியம் தலைமையில் சைவ மணம் கமழ நடத்தியது.
செட்டிபாளையம் சோம கலா நாயகி சமேத சோமநாத லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில் சைவ சமய பிரச்சாரச் செயலாளர் சைவப்புலவர் வே.மகேசரெத்தினம் (ஓய்வு நிலை அதிபர்) நெறிப்படுத்தலில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .
தீட்சைகளை பிரபல குரு மு.கு.சச்சிதானந்த மூர்த்தி வழங்கினார் . தொடர்ந்து சான்றிதழ் நித்திய அனுஷ்டான விதி புத்தகம் என்பன வழங்கப்பட்டது. 7 வயதுக்கு கூடிய ஆண் பெண் இருபாலரும் சுமார் 100 பேர் கலந்து கொண்டு சிவ தீட்சை பெற்றனர்.
வி.ரி.சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .