Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மே 03 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்ரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழா புதன்கிழமை 03-05- 2023 முதல் எதிர்வரும் 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.கிரியாகால நிகழ்வுகள் 03-05-2023 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு புண்ணியாகவாசனம் வாஸ்து சாந்தி நடைபெற்று கணபதி ஹோமத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகும்
.04-05-2023 வியாழக்கிழமை காலை நவோத்திர சகஸ்ர சத 1008 சங்காபிஷேகமும் மாலை உள் வீதி உற்சவமும் நடைபெறும். காலை 7.00 மணிக்கு பால்குட பவனி நுவரெலியா லேடி மெக்லம் வீதி நீர் வீழ்ச்சியிலிருந்து ஆரம்பமாகும்.பகல் மகேஸ்வர பூஜையினை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை 5.00 மணிக்கு நித்திய பூஜையுடன் சுவாமிகளின் உள் வீதி ஊர்வலம் நடைபெறும்.
05-05-2023 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் வசந்த மண்டப பூஜை நடைபெற்று முத்தேர் பவனி நகர் ஊர்வலம் ஆரம்பமாகும். முத்தேர் பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பித்து உடபுஸல்லாவ வீதி, திறந்த பொருளாதார நிலையம், தர்மபால சுற்று வட்டாரம் வழியாக நுவரெலியா நகரம் சென்று மீண்டும் உடபுஸல்லாவ வீதி, வைத்தியசாலை வீதி, நவகம்கொட கிராமம் சென்று மீண்டும் முத்தேர் பவனி ஆலயத்தை சென்றடைந்ததும் தீ மிதிப்பு இடம் பெறும்
.06-05-2023 சனிக்கிழமை தீ மிதிப்பும், பிராயசித்த அபிஷேகமும் நடைபெறும். 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். இத் தேர்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
3 hours ago