2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார்

R.Tharaniya   / 2025 மார்ச் 06 , பி.ப. 02:06 - 0     - 16

பண்டாரவளை - கொஸ்லந்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார், எலி ஆகிய சிலைகள் வழங்கப்பட்டன.
பதுளை - வெலிமடை, வோர்விக் பகுதியில் கஷ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள  சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 160 மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாடசாலையின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் ஒரு லட்ச ரூபா நிதி பாடசாலை முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.


பதுளை- எட்டாம்பிட்டிய, 2 ஆம் பிரிவில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் கோரிக்கைக்கு அமைவாக, நேரடியாகச் சென்று பயன்பாடற்று பழுதடைந்த நிலையில் உள்ள தேரைத் திருத்தி வழங்குவது தொடர்பாகவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரமம் முதல்வர், சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று உதவிகளை வழங்கியதுடன் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .