2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

அகண்டசாய் ஜோதி முக்கியத்துவம்

Editorial   / 2025 மார்ச் 09 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகண்டசாய் ஜோதி என்பது ஸ்ரீ சத்குருசாய்நாதரின் ஆத்மஸ்வருபம் ஆகும். இந்த அகண்ட ஜோதியானது 49 நாட்கள் இடைவிடாமல் 24 மணிநேரமும், எண்ணெய் விளக்கேற்றி சத்குருசாய்நாதருக்கு அர்ப்பணிப்பது ஆகும். இந்த அகண்ட ஜோதியானது சாய்பக்தர்களின் ஜென்மங்களாக சேர்ந்திருக்கின்ற பாவ மூட்டைகளை எரித்து அகற்றி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கின்றது.

அது மட்டுமல்லாது இந்த அகண்டசாய் ஜோதி நடைபெறும் அதேநேரத்தில் “சாய்சத்சரித பாராயணமும்”, சப்தாஹமாக 49 நாட்கள் பாராயணம் செய்ய ஸ்ரீ சத்குருசாய் நாதரின் உத்தரவு / சங்கல்பமாயுள்ளது. இந்த அகண்ட சாய்ஜோதி- ஸ்ரீ சாய்சத்சரித பாராயணமானது தீராத வினைகளையும், பக்தர்களின் பாவ மூட்டைகளையும் அகற்றவல்லது.

இந்த அகண்ட சாய்ஜோதி- ஸ்ரீ சாய்சத்சரித பாராயணமானது அவிசாவளை ஸ்ரீ சாய்நாதர்தியான மற்றும் சமூகமையத்தில் கும்பாபிஷேக, பிராண பிரதிஷ்டை நடந்தேறிய (09 மார்ச் 2025)பிறகு 13-ம் திகதி மார்ச் 2025, ஸ்ரீ ஸ்ரீ சித்த யோகினி ஸ்ரீமாதாஜி அவர்களின் திருக்கரங்களால், அகண்ட சாய் ஜோதியானது ஏற்றி வைக்கப்பட்டு அதனுடன் ஸ்ரீசாய்சத்சரிதபாராயணமும் தொடங்க ஸ்ரீசாய்நாதரின் அருளால் சங்கல்பமாயுள்ளது. மண்டலாபிஷேகம் நடைபெறும் வேளையில் இந்த அகண்டசாய்ஜோதி- ஸ்ரீ சாய் சத்சரிதபாராயணம் நடைபெற சங்கல்பமானது மாபெரும் தெய்வ மற்றும் சத்குருகடாக்ஷம் ஆகும்.

இந்த அகண்ட சாய்ஜோதி- ஸ்ரீ சாய்சத்சரிதபாராயணத்தின் பலன்களை நம்மால் சொல்லிமுடியாது. அப்பேற்பட்ட தெய்வீக அருள்நிறைந்தது இந்தஜோதி- பாராயணம்

இந்த அகண்டசாய் ஜோதி –ஸ்ரீ சாய்சத்சரித பாராயணத்தில் சாதி,மத,இன என எந்த ஒரு பேதமும் இன்றி அனைத்து பக்தகோடிகளும் கலந்துகொண்டு, அதில் பங்கு பெற்று ஸ்ரீசத்குருசாய்நாதரின் க்ருபாகடாக்ஷத்திற்கு பாத்திரர்கள் ஆகும் படி அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அவிசாவளை ஸ்ரீ சீரடிசாயிக்கு மண்டலாபிஷேகமாக அமையவிருக்கும் இந்த அகண்டசாய் ஜோதி- ஸ்ரீ சாய்சத்சரித தொடர் பாராயணத்தில் மக்கள் அனைவரும் திரளாக வந்து பங்கு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X