2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

41ம்நாள் மண்டல பூசை

Mayu   / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாண்டிருப்பு அரசடி அம்மன் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஐய்யப்பனின் 41ம் நாள் ஐயப்பனின் மண்டல பூசை வௌ்ளிக்கிழமை (27) வெகு விமரிசையாக இடம்பெற்றது.

காலை ஐயப்ப ஹோமம், 108 சங்காபிஷேக நிகழ்வின் பிற்பாடு மண்டல பூசை ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து குரு ஆசீர்வாதம், ஐயப்ப சுவாமிமார்களின் பஜனை ஆகியன நடைபெற்றன.

இந்நிகழ்வு தர்மசாஸ்தா யாத்திரிகர் பேரவையின் குருசாமி பிச்சப்பிள்ளை சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது. 

இறுதி நிகழ்வாக விபூதிப் பிரசாதம் வழங்கப்பட்டு மதியம் மகேஸ்வர பூசை நடைபெற்றதோடு பக்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 வி.ரி. சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X