Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மூன்று வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “வரிசை யுகத்துக்கு தீர்வு காணப்பட்டது. மீண்டுமொரு வரிசை யுகம் தேவையா”? என அரசாங்க தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். வரிசை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இன்னும் வரிசைகளே காணப்படுகின்றன என எதிர்தரப்பினரால் பதிலளிக்கப்படுகின்றது.
வரிசைகளுக்கு தீர்வு காணமுடியாது. எனினும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் இருந்த நீண்ட வரிசை யுகத்துக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது. அதனை, அரசாங்கம் தனித்து தீர்க்கவில்லை. ஏனைய நாடுகள், சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவிகளின் ஊடாகவே தீர்க்கப்பட்டது. உதவி ஒத்துழைப்பு கிடைக்குமாயின், யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் தீர்த்திருப்பர்.
ஆனால், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஏற்பட்டிருந்த வேலைவாய்ப்பு இன்மைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால், பலரும் நாட்டை விட்டு வெளியேறி சென்றுக்கொண்டிருக்கின்றனர். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான வரிசை காணப்படுகின்றது என்பது உண்மைதான்.
வேலைவாய்ப்பு இன்மை நமது நாட்டுக்கு மட்டுமே உரித்தான பிரச்சினை இல்லை. உலகளாவிய பிரச்சினையாகும். இந்நிலையில்தான், 2 வயதிலேயே வேலைத்தேடும் குழந்தை தொடர்பிலான செய்தி வைரலாகிவருகின்றது.
புதுடெல்லியைச் சேர்ந்த டைகர் சௌகான் என்ற 2 வயது குழந்தை, தனக்கான எதிர்காலத்தை தேடி கண்டுபிடிப்பதற்காக லிங்கிட்இன் தளத்தில் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஏற்கனவே 2 வருடம் தாமதம் ஆகிவிட்டதாக நெட்டிசன்கள், கிண்டல் செய்துள்ளனர்.
லிங்க்ட்இன் என்பது வியாபாரம் மற்றும் வணிகத்தை பெருக்கவும், வேலைவாய்ப்பிற்காகவும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளம் ஆகும். இந்த லிங்க்ட்இன் தளத்தில் இரண்டு வயது குழந்தை இணைந்துள்ளது. ஒரு குழந்தை தற்போது உள்ள வேலைக்கான அழுத்தத்தை சுட்டிக்காட்டும் வகையில் லிங்க்ட்இன் தளத்தில் இணைந்துள்ளது.
வேலையை தக்கவைத்துக்கொள்ளல், புதிய வேலைக்கான தேடல் உள்ளிட்டவற்றின் மீதான அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகின்றது. நமது நாட்டை பொருத்தவரையில், வேலைவாய்ப்பு இன்மையால், சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தேர்தல் விஞ்ஞாபனங்களின் பிரகாரம் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். சம்பள அதிகரிப்பு, மேலதிக கொடுப்பனவுகள் உள்ளிட்டவை தொடர்பிலான பேச்சுகள் காதுகளை இனிக்கச் செய்கின்றன. எனினும், அவை எவ்வளவு தூரத்துக்கு சாத்தியமாகும் என்பதற்கெல்லாம் எதிர்காலமே பதிலளிக்கும்.
எனினும், ஆட்சிப்பீடமேறும் தரப்பு, ஊழல்,மோசடி உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் ஏனெனில், வெளிநாடொன்று வழங்கிய வாகனத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திய அரசியல்வாதி ஒருவதை நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டுள்ளது. இதனால் இலங்கை பார்த்து உலகம் சிரிக்கிறது.
அந்த சம்பவத்தால் இலங்கை தொடர்பில் உலகத்தில் துர்நாற்றம் வீசுகிறது, இந்த நாட்டிற்கு ஏற்பட்ட கரும்புள்ளியை எளிதில் துடைக்க முடியாது. நம் நாட்டிற்கு இதுபோன்ற அவசர உதவிகளை வழங்க பணக்கார நாடுகள் இனியும் முன்வருவார்களாக என்ற சந்தேகம் எழுகின்றது.
எவ்வாறாயினும் நாட்டின் எதிர்காலமும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. சட்டத்தை மதித்து நாட்டை செழிப்புக்கு இட்டுச் செல்வதற்கான முடிவை எடுக்க இன்னும் 22 நாட்கள் உள்ளன என்பதை நினைவு படுத்துகின்றோம்.
30.08.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago