மனித-யானை மோதலின் விளைவாக, யானைகளால் அழிக்கப்படும் பயிர்ச்செய்கைகள் மனிதர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. யானைகள் பயிர்களை மட்டுமல்லாது, அருகிலுள்ள சொத்துகளையும் அழிக்கின்றன. சில சமயங்களில் மனிதருக்குக் காயங்களை அல்லது மரணத்தை ஏற்படுத்தி, மனிதப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
மனித-யானை மோதல்களில் 2023ஆம் ஆண்டில் 340 யானைகள் உயிரிழந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு 239 யானைகள் உயிரிழந்துள்ளன. அத்துடன், யானை தாக்குதலால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளும் 117ல் இருந்து 90 ஆக குறைந்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், 2025 ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில், ரயில்களில் மோதுண்டு இறக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்போது 5,300 யானைகளுக்கு மேல் இல்லை. ஆண்டுதோறும் குறைந்தது 400 யானைகள் பல்வேறு விபத்துகளால் இறக்கின்றன. கிராமங்களுக்குள் நுழையும் சில யானைகளை மக்கள் சுட்டுக்கொன்று விடுகின்றனர். அல்லது ‘ஹக்கப்பட்டாஸ்’ வெடிகளைச் சாப்பிட்ட பிறகு காயங்களால் இறக்கின்றன. அதன்பின்னர் யானையின் இரண்டு தந்தங்களையும் வெட்டி, வாலில் இருந்து அனைத்து முடிகளையும் பிடுங்கிவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
யானைப் பிரச்சினையைத் தீர்க்க எந்த அரசாங்கமும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஒவ்வொரு அரசாங்கமும் செய்தது மின்சார வேலிகளை நிறுவுவதற்குப் பணத்தை அனுப்பி அதிலிருந்து தரகு பணத்தை வசூலிப்பதுதான். மலிவான மின்சார வேலிகள் பயனற்றவை. அப்படிப்பட்ட வேலியை யானை உதைத்து எறிந்தால், வேலி அறுந்து விழுந்துவிடும்.
யானைப் பிரச்சினையைத் தீர்ப்பதை விட யானைகளை ஒழிப்பது எளிது. யானைகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள விவசாயிகளும் யானைகள் இறக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது தொடர்ந்தால், சில வருடங்களுக்குள், இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை முற்றிலுமாக அழிக்கப்பட்டு,
யானைகள் ரயிலில் அடிபடுவது கடந்த சில தசாப்தங்களாக ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும். ரயில் வரும் வேகத்தில், ரயில் தண்டவாளத்தில் இருக்கும் யானைக்குத் திரும்பக்கூட நேரம் இருக்காது. மேலும், சில யானைகள் ரயில் வருவதைப் பார்த்த பிறகும் ரயில் தண்டவாளத்தின் நடுவில் நிற்கின்றன. ரயில்வே சாரதிகள், ரயில் பயணிகளா? அல்லது யானைகளா? என்பதை விட்டுக் குழப்பமடைந்துவிடுகின்றனர்.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாட்டின் நிலப்பரப்பில் 85 சதவீதம் காடுகளாக இருந்தபோது, காடுகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்தன. அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. உயிருடன் இருக்கும் யானைகளைக் காப்பாற்றுவதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசாங்கமும் அதிரடியான உருப்படியான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
.
காடுகளில் யானைகளுக்குத் தேவையான அளவுக்கு உணவு இல்லை, காடழிப்பு ஒருபக்கம் இடம்பெறுவதால், மக்களின் வாழ்விடங்களை நோக்கி, யானைகள் வருகின்றன. சுற்றுலா செல்வோரும் யானைகளுக்கு உணவு கொடுத்து, நடு வீதிகளுக்கு இழுத்து வந்துவிடுகின்றனர். இதனால், உணவுகள் கிடைக்காதபோது, மனிதர்களை யானைகள் தாக்குகின்றனர். ஆகையால், யானைகள் பிரச்சினைக்கு உரியத் தீர்வை கொடுக்க வேண்டும்.