Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Janu / 2024 நவம்பர் 26 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஜனாதிபதித் தேர்தல், அதற்கு பின்னரான பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பலரும் ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். தனி ஒரு கட்சியினால் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க முடியாது என்பதே கடந்தகால வாதமாக இருந்தது. எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அந்த கூற்றை சுக்குநூறாக்கிவிட்டது.
நாட்டில் ஏற்பட்ட இந்த அரசியல் மாற்றத்திற்கு சட்டத்தின் ஆட்சியின் சரிவு முன்னணியில் இருந்தது. அதனைதான், பாராளுமன்றத்தை கடந்த 21ஆம் திகதியன்று ஆரம்பித்து தனது அக்கிராசன உரையின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மிகத் தெளிவாக கூறியிருந்தார்.
“சட்டத்துக்கு மேல் யாருமில்லை: தான் உட்பட அனைவரும் சட்டத்துக்கு கீழானவர்கள்” கடந்தகாலங்களில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கூட, அந்தந்த அரசாங்கங்கள் அமுல்படுத்த தவறிவிட்டன. அதுவே, சட்டத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சிதைக்கும் செயலாக இருந்தது.
ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்காகச் செயற்படுவதற்கு சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் தமது கடமைகளைச் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தொலைபேசி மூலம் பெறப்பட்ட ஒப்பந்தத்துக்காக ஒருவரைக் கொல்லக்கூடிய அடியாட்கள் சில பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு உண்டு.
இந்த நாட்டில் பாதாள உலகக் கும்பல்கள் தாங்களாகவே தோன்றவில்லை. இது வரை அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தைப் பெறவும், தக்கவைக்கவும் பல்வேறு கும்பல்களின் ஆதரவைப் பெற்றுள்ளனர். அவ்வாறு ஆதரவைப் பெற்ற அரசியல்வாதிகள் அமைச்சர்களாக பதவியேற்றதன் பின்னர் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட குண்டர்கள் தமது சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு அரசியல் ஆதரவைப் பெற்று அமைச்சர்களின் ஆதரவினால் பாதுகாப்புப் படையினரால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுவதில்லை.
தற்போது ஆரம்பமாகியுள்ள மறுமலர்ச்சி யுகத்தில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகியிருப்பதை இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் மூலம் தெரியவருகின்றது. குண்டர்களால் அனுசரணை பெற்றவர்கள் குப்பையில் வீழ்ந்த வேளையில் இந்நாட்டு ஏழை மக்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய பெருந்தொகையான மக்கள் இந்த ஆண்டு சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்போது இந்த நாட்டில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான சட்டங்களை இயற்றுவதில் எந்தத் தடையும் இல்லை.
பாதாள உலகமும், போதைப்பொருள் வியாபாரிகளும் இந்த சமூகத்தின் இருப்புக்கு சமமாக ஆபத்தானவர்கள். போதைப்பொருள் கடத்தலுக்கு வெளியே குறிப்பிடத்தக்க அரசியலும் உள்ளது. இந்த மோசடி மூலம் கிடைக்கும் பணம் அரசியல்வாதிகளுக்கு செலவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிபதி கூறியது போல், சட்டத்தின் ஆட்சி யுகத்தை உருவாக்க போதைப்பொருள் கடத்தல் ஒழிக்கப்பட வேண்டும். கிராம மட்டத்தில் பனைமரம், வாழைத்தண்டு வெட்டி விற்று போதைக்கு அடிமையாகும் இளைஞன் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் பாதுகாப்பிற்கு மத்தியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரி வரை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சிவில் சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத துப்பாக்கிகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன என்பது இரகசியமல்ல. இது சமூக ஜனநாயகத்துக்குக் கடுமையான ஆபத்தாக இருப்பதுடன், அரசின் இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. பதவிகளை இழந்த அமைச்சர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல துப்பாக்கிகள் இன்னும் மீள வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதிகாரம் இழந்த இந்த அரசியல்வாதிகளுக்கு இனி பாதுகாப்பு தேவையில்லை என்பது போல, அவர்கள் எந்த நோக்கத்திற்காக தொடர்ந்து துப்பாக்கிகளை வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.பல்வேறு தீமைகள் நிறைந்த இந்த சமுதாயத்தை தூய்மைப்படுத்துவது எளிதான காரியம் இல்லை என்பது உண்மைதான்.
26.11.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .