Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2024 நவம்பர் 15 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக அமைதியாக விரலில் பூசப்பட்ட ஊதா மை
நாட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்த்திருந்த காலம் மலையேறி, என்ன? நடந்தது என்று கேட்கும் அளவுக்கு, தேர்தலொன்று நடந்து முடிந்துள்ளது. இல்லை, இல்லை, தேர்தலொன்று நடந்ததா? என கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மிக அமைதியான முறையில், 10 ஆவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் 2024 நவம்பர் 14ஆம் திகதியன்று நடைபெற்றது.
மிக அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றிருந்தாலும், வாக்காளர்களில் பலரும் வாக்களிக்கவில்லை அல்லது வாக்களிக்க செல்லவில்லை. தங்களுக்கு கிடைத்த ஜனநாயக உரிமையை அவர்கள் பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்களாகவே இருந்தனர். இது பெரிய ஆபத்தாகும்.
ஆகையால், எதிர்வரும் தேர்தல்களில், வாக்களிக்கும் முறைமையை இலகுபடுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், புதிய தேர்தல் சட்டமொன்றை கொண்டுவரமுடியுமாயின், வாக்காளர்கள் பாதிக்கப்படாத வகையில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வாக்களிக்காவிடின் தண்டனை அறவிடவும், வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்கான சரத்துக்களையும் சேர்க்க வேண்டும்.
வாக்களித்தவர்களையும், வாக்களிக்காதவர்களையும் இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும். விரலில் பூசப்பட்ட ஊதா நிற மை, இரண்டொரு வாரங்களுக்கு அப்படியே இருக்கும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிப்பதைத் தடுக்க இந்த மை பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பெயிண்ட் கரைசலில் சில்வர் நைட்ரேட் உள்ளது. இது தோல் மற்றும் சூரியனுடன் வினைபுரிந்து சில நாட்கள் நீடிக்கும் கறையை ஏற்படுத்துகிறது. சவர்க்காரம், தண்ணீரால் அதை அகற்றவே முடியாது. சில்வர் நைட்ரேட் தோலின் வெளிப்புற அடுக்கில் ஊடுருவிச் செல்வதால், மெல்லிய பொருட்களைப் பயன்படுத்தி அதை அகற்றுவது கடினம்.
1962ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் விரலில் முதன்முதலில் இந்த தேசத்தின் குறி பதிவாகியது. உலகம் முழுவதும் தேர்தல்கள் நடத்தப்படும்போது, அதன் ஒழுங்குமுறைக்காக விரலில் மை இவ்வாறு பூசப்படுகிறது.
இந்நாட்டில் சிலர் பாராமுகமாக இருந்தாலும், மக்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தேர்தல் விலை மதிப்பற்றது. இன்றைய பொதுத் தேர்தலில் வரும் முடிவுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஒவ்வொரு கட்சியின் கொள்கைகளையும், கடந்த காலத்தையும், நாம் அளிக்கும் வாக்குகளையும் பார்க்கும் போது, இந்த நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும்,
வாக்குப்பதிவு முடிந்தவுடன் சிலர் தொலைபேசியில் நிலைமையை கேட்டறிகின்றனர். நிலைமையை அப்படிச் சொல்லலாம் என்றால், கணக்கெடுக்கும் அதிகாரிகளே தேவையில்லை. விருப்பு வாக்குகள் எண்ணப்படும் போதும், அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
தேர்தல் கலாசாரத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் காலம் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சூழல் இப்போது மாறிவிட்டது.
இந்த நாட்டின் எதிர்கால நிறத்தை வாக்கெடுப்பு முடிவுகள் தீர்மானிக்கும் என்பதை நினைவூட்டி, எதிர்கால தேர்தல்களும் இதேபோன்று, அமைதியாக நடைபெற வேண்டும். அதற்கு, ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் 2024 பொதுத் தேர்தல் ஓர் உதாரணமாகும்.
15.11.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
39 minute ago
45 minute ago