Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்களிப்பது ஒரு நாட்டின் குடிமக்களின் முழு உரிமை. அந்த உரிமையை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்துவது ஒரு நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார நல்வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில், நாட்டின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு செப்டம்பர் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏற்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. கட்டுப்பணம் செலுத்தல் அதிகரித்துள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எத்தனை பேர் போட்டி இடுவார்கள் என்பதை உறுதியாக கூறமுடியாது. எனினும், கடந்த முறையை விடவும் கூடுதலானவர்கள் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில், பிரதான வேட்பாளர்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு, புதன் (07) அல்லது வியாழன் (08) அன்று அறிவிக்கப்பட இருக்கிறது.
ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜனநாயகம் பிரதிநிதித்துவம் என்பது குடி மக்களின் நலனுக்காக செயல்படுவதற்காக குடிமக்களால் அவ்வப்போது பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தங்கள் பிரதிநிதிகளை குடிமக்கள் தேர்தல்களின் ஊடாக தேர்ந்தெடுக்கின்றனர்.
இலங்கையை எடுத்துக்கொண்டால் முக்கியமாக நான்கு தேர்தல்களில் கவனம் செலுத்தப்படுகிறது. அதுவே ஜனாதிபதி, பாராளுமன்ற,, மாகாண சபை, உள்ளூராட்சி தேர்தல்கள் ஆகும். எனினும், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. அதற்கு எதிராக குரல்கள் இன்னும் எழுப்பப்படுகின்றன.
ஒரு நல்ல குடிமகன் தன் பொறுப்பை மட்டும் நிறைவேற்றி அமைதியாக இருப்பவன் அல்ல. அதாவது கடமையை அல்லது தொழில் வாழ்க்கையை செய்து வரி செலுத்தி சட்டப்படி வாழ்வது மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். போராட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும். பொது நலனுக்காகச் செயல்படுபவராக இருக்க வேண்டும். வாக்களிக்கும் எத்தனை பேர், அவ்வாறு போராடுகின்றனர் என்பது கேள்வியாகும்.
அதேபோல், அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கான, போராட்டங்கள் நடத்தப்படுகின்றனவா? அல்லது, தாங்களும் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது காண்பிப்பதற்கு போராட்டங்கள் நடத்தப்படுகின்றனவா என்பதை எல்லாம் வாக்காளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
பல லட்ச மக்களின் மனங்களை வென்று, ஆகக்கூடிய வாக்குகளை பெற்று ஆட்சி பீடத்தில் இருக்கின்றோம் என மமதையுடன் செயற்படவும் கூடாது. ஆட்சி பீடத்தில் ஏற்றியவர்களை, கீழே இறக்குவது வாக்காளர்களுக்கு பெரிய வேலை இல்லை என்பது கடந்தகால கசப்பான அனுபவங்களாகும்.
குடிமக்களாகிய நாம் மாற்றத்தை செய்ய வேண்டும். இல்லையேல் செய்யாவிட்டால், எத்தனை தேர்தல்கள் நடத்தினாலும், எத்தனை பிரதிநிதிகளை நியமித்தாலும், அமைப்பில் எத்தனை மாற்றங்கள் செய்தாலும், நாம் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. அனைத்து குடிமக்களின் பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் நாட்டை நிலையானதாக கட்டியெழுப்ப நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
07.08.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
58 minute ago
2 hours ago