Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 18 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் இரண்டு பரீட்சைகள், திங்கட்கிழமை (17) ஆரம்பமாகியுள்ளதாகக் கூறினால், தவறிருக்காது. முதலாவது, கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை, மற்றையது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்றல். இதில், முதலாவது பரீட்சை, தடைதாண்டல், இரண்டாவது அரசியல் அதிகாரத்தை சுரண்டி பார்க்கும் பரீட்சையாகும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சிப்பீடம் ஏறியதன் பின்னர், நடத்தப்படும் முதலாவது தேர்தல் இதுவாகும். இது அரசாங்கத்துக்குத் தனது பலத்தை சுரண்டி பார்க்கும் வகையில் அமையக்கூடும். எதிரணியினரும் பலத்தை நிரூபிக்கும் வகையில் அமையக்கூடும்
திங்கட்கிழமை (17) ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 3,663 மையங்களில் நடைபெறுகிறது. பாடசாலை பரீட்சார்த்திகள் 398,182 பேர் அடங்களாக 478,182 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்றல் திங்கட்கிழமை(17) ஆரம்பமாகி, வியாழக்கிழமை(20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.
பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அண்மையில், அமைதி கடைப்பிடிக்கப்படும். வாகனங்களில் செல்வோர் கூட ஹோன் சத்தம் எழுப்பக் கூடாது. ஒலிபெருக்கி பாவனையும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைப் பரீட்சைகள் திணைக்களம் ஒவ்வொரு பரீட்சைகளின் போதும் கடைப்பிடிக்கிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போதும், அதற்குப் பின்னர் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலின் போதும் வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி, வெற்றியை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடியது. ஒரு சில இடங்களைத் தவிர, பரவலாகப் பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை. அந்தளவுக்கு அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், முந்தைய ஆட்சிகளின் போது, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் வெற்றி வரையிலும், பேரணிகளுக்குக் குறைவே இருக்கவில்லை. உண்மையில், அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகையால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததன் பின்னர், எவ்விதமான கொண்டாட்டங்களும் இன்றி, அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மத்திய நிலையங்கள், பிரதான நகரங்களில் இருக்கின்றன. அதேபோல், வேட்பு மனுக்களைப் பொறுப்பேற்கும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களும் பல இடங்களில், பிரதான நகரங்களில் இருக்கின்றன. ஆக, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ததன் பின்னர், அமைதியைக் கடைப்பிடிப்பதே சிறந்தது.
பரீட்சை நிறைவடையும் வரையில், தேர்தல் தொடர்பான எந்தவிதமான பேரணிகளையும் நடந்துவிடக்கூடாது. அத்துடன், அக்காலப்பகுதியில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மிகவும் அமைதியான முறையில், ஒலிபெருக்கி பாவனை இன்றி முன்னெடுத்தால் எதிர்கால தலைவர்களான மாணவர்களின் பரீட்சைக்கு ஒத்துழைப்பு நல்குவதாய் அமையும் என்பதே எமது அவதானிப்பாகும்.
2025.03.18
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
1 hours ago