Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில், புனித தந்த தாது, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெறுவதால், கண்டியை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் ஏராளம்.இந்த தந்த தாதுவை, தங்களுடைய வாழ்நாளில் ஒரு நாளாவது வாங்கிவிட வேண்டும் என்பதே பௌத்தர்களின் வேண்டுதலாகும்.
அடுத்த கண்காட்சியின் போது, நாங்கள் உயிருடன் இருப்போமோ, இல்லையோ, என்பது தெரியாது. எனினும், புனித தந்த தாதுவை தரிசிக்க கிடைத்தமை, தனது வாழ் நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாகும் என முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.
முந்தைய அரசாங்கங்கள் புனித தந்த தாது கண்காட்சியை நடத்தி இருந்தாலும், இம்முறை போன்று வரவேற்பு கிடைக்கவில்லை.
ஏனெனில், மக்களோடு மக்களாக இருந்தே, அனைவரும் தரிசிக்க வேண்டும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் சென்று, வழிபட்டு, கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
தன்னுடைய உரைகளின் போது, தலதா மாளிகை, அனுராதபுரம் போதிக்குச் செல்லும்போது, ஊடகங்களின் படையெடுப்புடன் செல்லமாட்டேன் என்று கூறியிருந்தார். எனினும், அவரது உரையையும், புனித தந்த தாது கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் போது, ஊடகங்கள் சென்றிருந்தமையை ஒப்பிட்டு, சில சமூக ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றன.
ஊடகங்களுடன் படையெடுத்துச் செல்வது வேறு, ஊடகங்கள் சென்று அறிக்கையிடுதல் வேறு என்பதை அவ்வாறான சமூக ஊடகங்கள் நன்றாக புரிந்து கொள்வது அவசியமாகும். எனினும், கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கு, புகைப்படம் எடுப்பதற்கு, வீடியோ செய்வதற்கான ஏற்பாடுகளை, அரசாங்க தகவல் திணைக்களம்ளமே மேற்கொள்ளும், புனித தந்த தாது கண்காட்சியின் போதும், அதே ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதி விசேட பிரமுகர்கள், விசேட பிரமுகர்கள் என பிரிக்கப்படாமல், சாதாரண மக்களுடன் சென்றே வழிபட வேண்டும் என்ற கட்டுப்பாடு வரவேற்கதக்கது. ஏனெனில், பிரமுகர்களுடன் செல்லும் பட்டாளங்கள் கால் நோகாது, வழிபாடு செய்து விட்டு வந்து விடுவார்கள், கால் வலிக்க, பல நாட்கள் காத்திருக்கும் சாதாரண மக்களுக்கு வழிபடுவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைப்பதில்லை.
இந்த கண்காட்சியையும், அங்கு குவிந்திருக்கும் மக்களையும் பார்க்குமிடத்து, இதில், அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. எனினும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து, மறைமுகமாக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், போதிய வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
வந்திருந்த யாத்தீரர்கள், தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகம் இடம் வழங்கியிருந்தமை தொடர்பான செய்திகளும் சமூக ஊடகங்களின் ஊடாக காணக்கிடைத்தது. ஆக, சாதாரண மக்களிடத்தில் பேதங்கள் இல்லை என்பதையே இது எடுத்தியம்புகின்றது.
16 வருடங்களுக்கு பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புனித தந்த தாது கண்காட்சி, குறுகிய நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இருப்பதால், காத்திருக்கும் மக்களுக்கு தரிசிக்க கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், கண்காட்சி நாட்களை நீடிப்பதற்கு அல்லது பார்வையிடும் நேரத்தை அதிகரிக்க வழி சமைப்பதே சிறந்தது.
21.04.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago