Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில் துறைசார் வல்லுநர்கள், நிபுணர்கள், நாட்டை விட்டோடும் நிலைமைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. அவ்வாறானவர்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுத்தல் இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இது, நாட்டின் எதிர்காலத்துக்கும், தொழில் துறைகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாகவே அமையும் என்பதில் எவ்விதமான ஐயப்பாடும் இல்லை.
தங்களுடைய ஊதியத்திலிருந்து அறவிடப்படும் வரி அதிகரிப்பை அடுத்தே, நிபுணர்களும், வல்லுநர்களும், நாட்டை விட்டோடிக்கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தின் வருமானம் குறைந்துவரும் போது, அவற்றை ஈடுசெய்வதற்காக, அரசாங்கத்தால் அவ்வப்போது விதிக்கப்படும் புதிய வரிகள் இன்றேல் வரி அதிகரிப்பு காரணமாக, சாதாரண மக்கள் முதல், நடுத்தர தொழில் புரிவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியதுறைகளைச் சேர்ந்தவர்களால் தங்களுடைய தொழிலுக்கு ஏற்றவகையில் ஊதியம் கிடைக்காமையால், அவ்வாறானவர்களின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரிகளால், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம், இதுவரையிலும் சுமார் 40க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.
வைத்தியசாலைகளுக்குத் தேவையான வைத்தியர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட ஆளணி பற்றாக்குறை, வைத்திய சாலைகளுக்குத் தேவையான மருந்து தட்டுப்பாடுகள் உள்ளிட்டவை, வைத்தியசாலைகளை இழுத்து மூடப்படுவதற்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. இதனால், சாதாரண மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
மருந்து பொருட்களின் விலையேற்றத்தால், சாதாரண மருந்துகளைக்கூட குறைந்த விலைகளில் கொள்வனவு செய்துகொள்ள முடியாதுள்ளது. மற்றுபுரத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக்கொள்ளமுடியவில்லை. பொருட்களின் விலைகளும் எகிறிக்கொண்டே செல்கின்றன.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிகாரிகளின் வழங்கப்படும் கல்சியம் மற்றும் வைட்டமின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகத் தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், வைட்டமின்கள், கல்சியம், மருந்துகளை ஆகக் கூடுதலான விலையைக்கொடுத்து வெளியிலிருந்து வாங்க வேண்டிய நிலைமை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, இரண்டொருவரின் வேலைகளை ஒருவரே செய்துமுடிக்க நிர்ப்பந்திக்கப்படுவதால், தொழில்களைத் தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது நாட்டில் தொழில் இல்லாதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கச் செய்துவிடும்.
ஆகையால், பெரும் நகரங்களுக்கு தொழில்களைத் தேடிப் படையெடுப்போரின் எண்ணிக்கை வழமையை விடவும் அதிகரித்துள்ளது. அவற்றை நிவர்த்திக்க வேண்டுமாயின், பிரதேச மட்டங்களில் தொழில் சந்தைகளை ஏற்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசங்களில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும். இல்லையேல் தொழில் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவே, அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியாய் மாறும் என்பதை நினைவூட்டுகின்றோம்.
2023.11.30
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago