Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீமை இருளை நீக்கி; தூய்மை எண்ணங்களை பரவச் செய்வோம்
உலகவாழ் தமிழர்கள், இந்துக்கள், இன்றையதினம், இனிய தீபாவளியை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தீபங்களை வரிசைப்படுத்தி வைத்து வழிபாடும் செய்யும் நாளாக இதனை போற்றுகின்றோம். நரகா சுரன் எனும் அசுரனை அழித்த தினத்தையே தீபாவளியாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்லுகின்றன. அந்த நரகாசுரனையே, மனதின் தீமைகளோடு ஒப்பீடு செய்கின்றனர்.
இன்றைய தீபாவளியை மிகவும் உற்சாகமாக கொண்டாடுவதற்கான, முன்னேற்பாடுகளை பலரும் கடந்த பல நாட்களில் இருந்தே செய்துகொண்டிருந்தனர். வீடுகளை சுத்தப்படுத்தல், வர்ணங்களை பூசுதல், புத்தாடைகளை கொள்வனவு செய்தல், இனிப்பு பண்டங்களை தயாரித்தல் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். அந்தளவுக்கு இந்த பண்டியை தமிழர்களிடத்தில் விசேடமான பண்டிகையாக கொண்டாப்படுகின்றது.
எனினும், தங்களுடைய பொருளாதார நிலைக்கு ஏற்றவகையில், ஆடம்பரமின்றி, கடனாளி ஆகிவிடாது, மிகவும் எளிமையான முறையில் கொண்டாடும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தளவுக்கு அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி விளையாடி விட்டது. விளையாடிக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா, பீஜி தீவு, மலேசியா, மொரீசியஸ், இந்தோனேசியா, நேபாளம், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், இந்துக்கள் வாழும் பிரதேசங்களில் வெகு விமர்சையாக இந்த தீபாவளி பண்டியை கொண்டாப்படுகின்றது.
அமெரிக்காவின் வெள்ளைமாளிகையிலும், அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன், திங்கட்கிழமை (25) தீபாவளி கொண்டாட்டங்களை, குத்துவிளக்கேறி ஆரம்பித்து வைத்தார் என்பதும் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். ஆக, உலகத்தில் எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம், தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
நமது நாட்டை பொறுத்தவரையில், புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம்” எனும் தலைப்பின் கீழ்,நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டுள்ளார். “வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை உறுதி செய்வோம்” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவும், இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ. “அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகமே ஒளிமயமாகட்டும்” என, தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஏனைய கட்சிகளின் தலைவர்கள், நலன்விரும்பிகள், மதத்தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.எனினும், புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் என்றெல்லாம் கூறப்படுகின்றது.
தீபாவளி தினமான இன்று (ஒக்டோபர் 31) அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.
அவ்வாறு கொளுத்தும் போது, ஏனையோருக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், காயங்கள் ஏற்படாத வகையிலும் கவனமாக இருக்கவேண்டும் என்பதுடன், தீப திருநாளான இன்று (31) வீடுகளில் ஏற்றப்படும் ஒளியைப் போன்று, தங்களுடைய ஒவ்வொருவரின் மனங்களிலும் தீமை இருள் நீக்கி? தூய்மை எண்ணங்களை பரவச் செய்வோம் என வலியுறுத்தும் அதேவேளை, அனைவருக்கும் எமது தமிழ்மிரர் சார்பாகவும் வாழ்த்துகின்றோம். (31.10.2024)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago