Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், அதாவது இன்று (01) முதல் 7 நாட்களுக்கு உலக தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த அவசர உலகில், பெரும்பாலான தாய்மார், தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்த்து வருகின்றனர். இல்லையேல், நவீன சாதனங்களைக் கொண்டு தாய்ப்பாலை முன்கூட்டியே எடுத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து பதப்படுத்தி, தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு புகட்டுக்கின்றனர்.
உலகில் உள்ள அத்தனை பாலூட்டிகளும், இயற்கையாகவே தங்கள் சந்ததிக்கு போதுமான அளவுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றன. ஆனால், மனித இனத்தில் மட்டும், பல்வேறு காரணங்களால் போதிய அளவுக்கு தாய்ப்பால் புகட்டுவது தடைப்படுகிறது. அதற்குக் காரணம், தாய்மார்களுக்கு விழிப்புணர்வு இன்மை தான். தாய்ப்பால் அருந்துவது என்பது குழந்தையின் உரிமையாகும். அதற்காக போராட முடியாது. வீரிட்டு அழ மட்டுமே முடியும்.
தாய்ப்பால்தான் மனிதனின் முழு உடல் ஆரோக்கியத்தை இறுதி காலகட்டம் வரை தீர்மானிக்கிறது. உலக சுகாதார மையம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக திகழும் குழந்தைகள் நல கூட்டமைப்பு ஆகியவை ஒன்றாக இணைந்து வெளியிட்ட ஆய்வு முடிவுப்படி, இளம் தாய்மார்களின் பால் சுரப்பு தன்மையின் அடிப்படையில் மூன்று மணி நேர இடைவெளியில் பால் புகட்டலாம்.
தாய்ப்பாலால் தாய் -சேய் இருவருக்கும் பலவிதமான நன்மைகள் ஏற்படும், தாய்ப்பாலூட்டல், பெண்களுக்குரிய உரிமை போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தச் சிறப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தாய்மை அடைந்த பெண்கள் குழந்தை பெற்றவுடன் வெளிப்படும் சீம்பால் உட்பட, அதனைத் தொடர்ந்து சுரக்கும் பாலை சிசுவிற்கு கொடுப்பது அவசியம். சுகப்பிரசவம் என்றால் அரைமணி நேரம் கழித்து, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்து இருந்தால் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் பால் தரலாம்.
குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுத்து வரலாம். பின்னர், மெல்ல மெல்ல எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை தரலாம். தாய்ப்பால் கொடுப்பதால், தாய்-சேய் இடையே உறவுப் பிணைப்பு பலப்படுகிறது. பால் புகட்டும் நேரங்களில், குழந்தைகளை நெருக்கமாக அணைப்பதால் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது; இதன் காரணமாக, தாய்ப்பால் சுரப்பும் தூண்டப்படுகிறது.
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மழலைச் செல்வங்களுக்கு சீரான இடைவெளியில் பால் புகட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்று பால் கொடுக்கும் போது கையாளப்படும் முறையில் கவனமாக இருக்க வேண்டும். இளம் தாய்மார்கள் ஒரு பக்கம் ஒருக்களித்த நிலையில் படுத்தவாறு அல்லது தங்களுடைய; இரண்டு கால்களையும் மடித்தவாறு, சம்மண நிலையில் உட்கார்ந்து, மடிமீது குழந்தையைப் படுக்க வைத்தும் பால் புகட்டலாம். பால் புகட்டுவதால் உடல் ஆரோக்கியம், அழகு குறைந்துவிடும் என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான எண்ணம்.
மனச்சோர்வு, இதயம் தொடர்பான பிரச்சனைகள், மார்பகப் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளில் இருந்து தாய்ப்பால் வழங்கும் பெண்கள்; பாதுகாக்க படுகிறார்கள் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் கொடுக்கும் அளவை அதிகரிப்பதன் மூலம் உலகளவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகளின் மரணம் தடுக்க படலாம் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
01.08.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago