2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

சதிகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள ஞானம் வேண்டும்

Janu   / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தலுக்கான நாள், நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அறுகம்பேயில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் பரவி வருகிறது. பல நாடுகள் இது குறித்து எச்சரித்துள்ள நிலையில், அந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

வருட இறுதியில், இலங்கையை நோக்கி சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பார்கள். அதனூடாக, நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமன்றி, சுற்றுலாத்தளங்களுக்கு அண்டிய பகுதிகளில், வீதியோரங்களில், வர்த்தகத்தில் ஈடுபடுவோரும் இலாபமடைவர்.

தாக்குதல் தொடர்பிலான தகவல் கசிந்தததன் பின்னர், பெருமளவிலான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, பெருமளவிலான இஸ்ரேலியர்கள் உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாலஸ்தீனம், லெபனான் மற்றும் பெரும்பாலும் ஈரானுடன் இஸ்ரேல் நடத்தும் போருக்குப் பழிவாங்கும் விதமாக இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் மீது இஸ்ரேலிய எதிரிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிடும்.

அறுகம்பேயில் மட்டுமன்றி, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அரசாங்கம் ஏற்கனவே அத்தகைய பாதுகாப்பை வழங்கியிருந்தாலும், இந்த எச்சரிக்கை சுற்றுலா வணிகத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதை மேலும் அலசினால், ஐரோப்பாவில் குளிர் காலநிலை தொடங்கும் ஒக்டோபர் மாதம் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் நேரத்தில் இந்த மாதிரியான கதை வெளிவருவது நமக்குள்ள இன்னொரு பிரச்சனை. அப்படியானால், இது ஒரு சதி என்றால், இலங்கையில் சுற்றுலா வருவாய் ஈட்டும் காலம் முழுவதையும் அழித்துவிட வேண்டும் என்பதே சதிகாரர்களின் விருப்பமாக இருக்கும்.

2024 ஆம் ஆண்டில் அடுத்த ஆண்டு வரை 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். எதிர்பார்க்கப்படும் வருவாய் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும். இந்த ஆண்டு ஏற்கனவே 15 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது ஒரு மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், அறுகம்பேயில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விளம்பரம் உண்மையில் நாட்டையே பாதிக்கின்றது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர், மூவர் கைது செய்யப்பட்டனர். எனினும், மேலதிக விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், அந்த விசாரணைகளில் பெறப்பட்ட விடயங்கள் அம்பலபப்படுத்தப்படவில்லை. எனினும், பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டே தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அறுகம்பே தாக்குதல் கதையை புறக்கணிக்க முடியாது என்றும், அது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம். நாடு மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க, அந்த சதிகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளும் ஞானம் வேண்டும் என்பதே நமது நினைவூட்டல் என்பதுடன், அச்சுறுத்தல் விலகிக்கொள்ளப்பட்டதாக தங்களுடைய நாடுகளுக்கு இலங்கையில் இருக்கும் இராஜதந்திரிகள் அறிவிக்கவேண்டும். அதனூடாகவே, சுற்றுலாத்துறையை கட்டிக்காக்க முடியும் என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X