2025 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

காப்பாற்ற ஆலோசனை வழங்க வேண்டியது கடமையாகும்

Mayu   / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாக ஆண்டுதோறும் ஒக்டோபர் 10 அன்று உலக மனநல நாள்  கடைப்பிடிக்கப்படுகின்றது. மனநலம் என்பது ஒரு நபர் எந்த அளவிற்கு பைத்தியமாக இருக்கிறார் என்று வரையறுக்கப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். இந்த பைத்தியக்காரத்தனம் சமூக சக்திகளாலும் சுயக்கட்டுப்பாட்டாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒரு நபர் சமூகத்திற்கோ அல்லது தமக்கோ தீங்கு விளைவிப்பதற்காக பைத்தியம் பிடிக்கத் தொடங்கினால், அது மன ஆரோக்கியத்தின் முறிவு என்று அழைக்கப்படலாம்.

பல காரணங்களை முன்வைத்து, இன்றேல் காரணங்களை சொல்லாமல் கொல்லமால், பலரும் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்கின்றனர். மதவெறி இல்லாத யாரும் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்வதில்லை.  மிகவும் புத்திசாலியான ஒருவர் கூட தற்கொலை செய்து கொண்டால், அவர் அல்லது அவள் பைத்தியமாகிவிடுவார்கள்.

இலங்கையின் மன ஆரோக்கியத்தின் தன்மையை சுகாதார அமைச்சு ஆராய்ந்துள்ளது, மக்களில் 7 சதவீதமான மக்கள் மன அழுத்தத்தில் உள்ளனர்.   அவர்கள் ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட ஏமாற்றங்களால் துயரத்தில் வாழ்கின்றனர்.   நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்போதுதான் தற்கொலை செய்து கொள்கிறனர்.

அதேசமயம், இந்நாட்டு மக்களில் 4.1 சதவீதமானோர் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்துவதில்லை. இதேவேளை, யாரிடமும் உதவி கிடைக்காது என நினைத்து தோற்றுப்போனவர்களாக 3.1 சதவீதமானோர் வாழ்கின்றனர். இவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் உள்ளது.

இலங்கையில்1996 ஆம் ஆண்டில், சுமார் 45,000 பேர் பல்வேறு மனநலப் பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 1999 இல், இந்த எண்ணிக்கை 47,500 ஆக இருந்தது. 2008 இல், இது 41,000 ஆகக் குறைந்துள்ளது. 2013ல், இது மீண்டும் 47,500 ஆக உயர்ந்தது. கண்டறியப்பட்ட பின்னர், இவர்கள் மனநல கோளாறு உள்ளிட்ட ஏழு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, உடல் ரீதியாக ஏற்படும் எந்த நோயும் மனதை பாதிக்கிறது. ஒருவருக்கு ஒரு காலை இழந்தால், அது ஒரு பெரிய சுமை. எனவே, சில சந்தர்ப்பங்களில், நபர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வது பற்றி நினைக்கிறார். பாடசாலை மாணவர்களில் பல மனநலப் பிரச்னைகள் உள்ளன. சிலர் தேர்வில் தோல்வி அடையும் பயத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

மற்றவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததால், வறுமையின் காரணமாக பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போட்டால்,  காதல் முறிந்தால், தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.தங்கள் பிரச்சினைக்கு தன்னுயிரை மாய்த்தலை முதல் தீர்வாக பார்க்கிறார்கள். தன்னுயிரை மாய்த்தல் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாத கடைசி  முயற்சியாக கருதுகிறார்கள். வருங்கால சந்ததியினரை அந்த முயற்சியில்இருந்து காப்பாற்ற ஆலோசனை வழங்க   வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X