2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

களிமண் ரொட்டியும் மேலாடை இல்லாத தோசையும்

Mayu   / 2024 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்ததாகக் கூறி கொழும்பு, ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிரபல உணவுகமொன்றுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகரால்  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு  வழக்குகள் புதன்கிழமை (21)  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு தாக்கல் செய்யப்படுவது முதல் முறையும் அல்ல இறுதியாகவும் இருக்காது.

பெரும் நகரங்களிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் உள்ள ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளும், நீண்ட தூரம் சேவைகளில் ஈடுபடும் பஸ்கள், தேனீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் ஹோட்டல்களிலும், உணவுகள் சுத்தமானதாக இருக்காது. விலையும் அதிகமென, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு​சில ஹோட்டல்களில் கழிவறைகளுக்கு சென்று திரும்பினால், சாப்பிடாமல் இருந்தாலும் வாந்தி வரும்.

உணவுப்பொருட்களில் மனித விரலில் பகுதி, ​நகம், தலைமுடி, ஊர்வனவற்றின் பாகங்கள், சட்டைப் பின், குண்டூசி இன்னோரன்ன பொருட்கள் மீட்கப்பட்டன. அதன் போதெல்லாம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்டத்தின் முன்னிறுத்தி, தண்டனைகளும் வழங்கப்படும், எனினும், பொதுச் சுகாதார பரிசோதகர் சிலருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளும் உள்ளன.

மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகளுடன், விலைகளிலும் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படுவதில்லை. எரிவாயுவின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் நுகரும் மா பொருட்களில் மாற்றமே இல்லை. மோசமான பொருளாதார நிலைமை ஏற்பட்டிருந்த வேளையில், ஏதோவொரு வகையில் சாப்பாட்டு வேளைகளை தவிர்த்தனர்.

மக்கள் கோதுமை மாவை சிலகாலமாக நாடினர். ரொட்டி மிகவும் எளிதான பொருள். ஒரு பருப்பு கறியுடன் சாப்பிட்டு விடலாம். நிலைமை மாறாமல் இருந்திருந்தால், களிமண் பிஸ்கட்டை சாப்பிட்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். எனினும், இருப்பதிலும் சுகாதாரம் இல்லை.

களிமண் பிஸ்கட் என்பது ஹைட்டியில் ஒரு பொதுவான பஞ்ச உணவாகும். களிமண்ணை மிகச் சிறிய துண்டுகளாக வடிகட்டி, தண்ணீரில் கலந்து பிஸ்கட்டுகளாகப் பிசைந்து வெயிலில் வைத்து களிமண் பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. சிறு குழந்தைகள் இந்த களிமண் பிஸ்கட்டை சாப்பிட்டு தண்ணீர் குடித்து பசியை போக்குகின்றனர். இது முதலை களிமண்ணை விழுங்குவதை போன்றது. உணவு பற்றாக்குறையாக இருக்கும் போது, ​​முதலை களிமண் துண்டுகளை விழுங்குகிறது. களிமண்ணை உண்பதால் முதலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. களிமண் பிஸ்கட் சாப்பிடுவதால் ஹைட்டி குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை.

இலங்கையின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பிச்சைக்காரர்கள் குப்பை வாளிகளால் சூழப்பட்டு இருப்பதை கண்டிருக்கலாம்.  பசியினால் இறந்திருக்கின்றனர். ​வீடுகளில் சமைக்க இயலாதவர்கள் ஹோட்டல்களையே நாடுகின்றனர். அவர்களுக்கு சுகாதாரமான உணவுகளை, நியாயமான விலையில் வழங்க வேண்டும். மேலாடைகளை கழற்றி வீசிவிட்டு, உப்பு வியர்வையை சேர்த்துவிடக்கூடாது. 23.08.2024

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X