Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்குகளை அள்ளிக்கொள்வதற்கான களச்சமர் சூடுபிடித்திருக்கும் நிலையில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான கதையாடல்களும் பொதுவெளியில் மீண்டும், பேசப்படும் பொருளாகிவிட்டது. இதனால் மீண்டும் உற்சாகமடைந்த சந்தர்ப்பவாதிகள் இந்த தலைப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
2019 ஏப்ரல் 21 அன்று ஈஸ்டர் தாக்குதல் நடந்தது. வர்த்தக நகரத்தில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்களை குறிவைத்து தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன். அந்த தாக்குதல்களின் தொடர், தெமட்டகொட வீட்டுத் தொகுதியில் நிறைவடைந்தது.
அப்போதிருந்து, தாக்குதல் ஓர் அரசியல் கால்பந்தாக மாறியது. ஆட்சி மாற்றத்திற்கான புகலிடமாக இருந்தது. ஈஸ்டர் தாக்குதல் அரசியல் தேவைக்காக கையாளப்பட்டது. பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டன. அதைப் பற்றிய கணக்கீடும் உள்ளது. பொருள் உடைமைகள் மற்றும் நிரந்தரமாக ஆதரவற்ற மக்களை மதிப்பீடு செய்யலாம். அவை புனரமைக்க முடியாத நினைவுகள் என்றாலும், அவற்றைப் பற்றிய மதிப்பீடு நம்மிடம் உள்ளது.
இந்த நிலைமையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மீண்டும் கையில் எடுத்துள்ளார். பெரும் ஆனைக்குழுக்களை விசாரணைக்கு பயன்படுத்தி திருப்திப்படுத்த முடியாத இந்த விஷயத்தை மீண்டும் அவர் கையில் எடுத்துள்ளார். இதனூடாகவும் அரசியல் தேடவே முயற்சிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களை பயன்படுத்தி அரசியல் செய்வதற்கான நேரமல்ல. பாதிக்கப்பட்டவர்கள், நீதி, நியாயம் கிடைக்கவேண்டும். இவ்வாறானதொரு தாக்குதல்கள் இனிமேலும் இடம்பெறாதவகையில், பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும். தற்கொலைத்தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு சாதாரண மனிதர்களை மூளைச்சலவை செய்யும் தரப்பினரை கண்டறியவேண்டும். சாதாரண மக்களிடத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டும்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போதுள்ள அனைத்து அறிக்கைகளையும் ஒருங்கிணைத்து ஓர் அறிக்கையாக உருவாக்க வேண்டும் என்பது உண்மைதான். அனைத்து வகையான விசாரணைகளும் ஒரு முடிவுக்கு இட்டுச் செல்ல வேண்டும். மறுபுறம், உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கை ஒரு வகையான பெரிய வழக்காக மாற்ற வேண்டும். அங்கிருந்து இறுதியாக, ஆரம்பத்தை எடுக்கலாம்.
அத்தகைய ஒரு பொறிமுறைக்கான விவாதங்கள் மேற்கொள்ளப்படுவது இப்போது இன்றியமையாததாகும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு அங்குதான் தீர்வு உள்ளது. அதிலிருந்து வெளிவரும் அனைத்தும் விபரங்களையும் ஒற்றாக திரட்டி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இல்லையேல், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு பின்னரும், இதனையே கதைத்துக்கொண்டிருப்பார்கள். அதனூடாக அரசியல் தேடவே முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்புலம் அம்பலப்படுத்த வேண்டும். அதனை விசாரணைக்குழுகளை மீண்டும், மீண்டும் அமைத்து இழுத்தடிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
7 hours ago
04 Apr 2025