Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜூன் 13 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடக சுதந்திரத்துக்காக வழங்கப்பட்ட வரலாற்று தீர்ப்பு
இரத்தினபுரியின் முன்னாள் ஆளுநர் திருமதி மாலானி லொக்குபோத்தகம மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி ஆகியோர் ஊடகவியலாளரிடம் பணிந்து, உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளரிடம் மன்னிப்புக் கோரியுள்ளர்.
ஊடகவியலாளர் சரத் விமலரத்னவுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனவும், அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாகவும் உயர் நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் உறுதியளித்ததையடுத்து இருதரப்பு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது
ஊடகவியலாளர் சரத் விமலரத்னவினால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முர்து பெர்னாண்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு ஒரு வரலாற்றுத் தீர்ப்பாகும்.
'கடவுள் ஒருவரிடம் கோபப்பட்டால், அவரை மூன்றாம் உலக நாட்டில் பத்திரிக்கையாளனாக்கி தண்டனை கொடுப்பார்' என்பது ஊடகங்கள் தொடர்பான பிரபலமான பழமொழி. இங்கு மூன்றாம் உலகம் என்றால் வளர்ச்சியடையாத நாடு என்று பொருள். உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சியடையாதவர்கள் என்று பொருள். அத்தகைய சமூகத்தில் ஒரு பத்திரிகையாளராக இருப்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான அனுபவம்.
ரிச்சர்ட் டி சொய்சா ஓர் ஊடகவியலாளர். நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரை அழைத்துச் சென்றனர். அவரது சடலம் எகொட உயன கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் கொல்லப்பட்டார். வரலாறு நெடுகிலும் சில ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தமது உயிரைப் பாதுகாத்துக் கொண்டனர்.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில், பல ஊடகவியலாளர்கள் அப்பட்டமாகவே படுகொலைச் செய்யப்பட்டனர். கடுமையான அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு தப்பியோடி வெளிநாடுகளில் குடியேறிவிட்டனர். அந்தளவுக்கு ஊடகவியலாளர்கள் நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுத்தனர்.
பத்திரிக்கையாளரின் பொறுப்பை அங்கீகரிக்காத மக்களின் பதில் அப்படி. கலாசார ரீதியாக நமது நாடு மிகவும் கீழ்நிலையில் இருப்பதால், நமது நாட்டை வளர்ச்சியடையாத நாடாகவே கருத வேண்டியுள்ளது.
ஊடகவியலாளர் சரத் விமலரத்ன தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இந்த தீர்ப்பு ஊடகவியலாளர்களின் பங்கை வேறு கோணத்தில் பார்க்க ஒரு தூண்டுதலை உருவாக்குகிறது. இரத்தினபுரி ஆளுநர் நாயகத்தின் அலுவலகத்திற்குள் தொப்பி அணிந்து பிரவேசித்ததார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர் சரத் விமலரத்ன தாக்கப்பட்டார்.
அதிகாரம் என்பது ஒடுக்குமுறைக்கான ஒரு கருவி. எனவே அதை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். சிலர் அதிகார போதையில் உள்ளனர். அது நிதி பலம், அரசியல் பலம், உத்தியோகபூர்வ பலம். அதிகார போதையில் இருப்பவர்கள் எல்லாம் தங்கள் தேவைக்கேற்ப நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லையெனில், அவர் தனது சக்தியை கொடூரமான முறையில் கட்டவிழ்த்து விடுகிறார். இந்த தீர்ப்பு அவர்களை ஒரு செயலைச் செய்வதற்கு முன் இருமுறை அல்ல ஆயிரம் முறை சிந்திக்க வைக்கும். அப்படியானால், 'குனிந்து' மன்னிப்பு கேட்கும் விதிக்கு நாம் அடிபணிய வேண்டியதில்லை.
06.03.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago