Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பயணத்துக்காக 'இலங்கைப் புத்தாண்டு' க்கு அத்திபாரம் இடுவோம்
எந்தவொரு கலாசாரத்திலும் கலாச்சார விழாக்கள் மிக முக்கியமான பகுதியாகும். அதன்படி, இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களின் கலாசார வாழ்வில் புத்தாண்டு மிகவும் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும். சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் முக்கியமாக சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அம்சங்களைக் கையாளும் போது மக்கள் பல்வேறு முரண்பாடுகளை அனுபவிப்பது இயல்பானது.
இத்தகைய முரண்பட்ட சமூகத்தை ஒரு கலாசார விழாவானது ஒற்றுமையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த முரண்பாடுகளை மறந்து புத்தாண்டை முன்னுரிமையாகப் பயன்படுத்தி, அங்கிருந்து ஒத்துழைப்புடன் புதிய பயணத்தைத் தொடங்குவது அவசியம். அவ்வாறான பயணத்தை அடுத்த ஆண்டில் இருந்தாவது ஆரம்பிக்க அத்திபாரம் இடவேண்டும்.
அடுத்த முக்கியமான விஷயம் கலாசசார பரிமாற்றம். அதாவது, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கலாசாரம் கடத்தப்படுவது. பழைய தலைமுறையிலிருந்து இளைய தலைமுறைக்கு கலாசார பழக்கவழக்கங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம்.
பழகுவதன் மூலம், அவர்கள் அதை தங்கள் வாடிக்கையாக மாற்றுகிறார்கள். ஒரு கலாசார நிகழ்வின் மதிப்பை உயர்த்தும் மற்றொரு முக்கியமான காரணி அடையாளம். மேலும், ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை அடையாளம் காணும் வகையில் கலாசார விழாக்கள் முக்கியமானதாக இருக்கும்.
புத்தாண்டு சம்பிரதாயங்களின் தன்மையும் அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும் அவதானிக்க முடிகிறது. கொண்டாடி முடிக்கப்பட்ட புத்தாண்டில் எத்தனை பேர், சம்பிரதாயங்களை அச்சொட்டாக பின்பற்றினர் என்பது கேள்விக்குறியே, சிங்கள-தமிழ் புத்தாண்டு என்றாலும், தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கும் இடையில் சம்பிரதாயங்களில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆகையால், இன ரீதியாகவும் மத ரீதியாகவும் புத்தாண்டை வகைப்படுத்தாது, 'இலங்கைப் புத்தாண்டு' என அழைக்கலாமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா, யோசனையொன்றை முன்வைத்துள்ளார். கலாசாரம், சம்பிரதாயங்களில் மாற்றங்கள் ஏற்படாத வகையில், முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் இந்த யோசனையை அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும்.
அரசாங்கத்துக்கு இந்த யோசனையைக் கொண்டு சென்று ஓர் அரச தீர்மானத்தை எடுக்கலாம் M12M பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் ( மெய்நிகர்) யோசனையை முன்வைத்துள்ளார்.
அந்தந்த மக்கள் அவரவர் மரபுகள், நம்பிக்கைகள் அடிப்படையில் அனுட்டானங்களைக், கொண்டாட்டங்களைச் செய்து கொள்ளலாம். ஆனால் சிங்கள தமிழ் அல்லது பௌத்த - இந்து அல்லது சிங்கள- இந்து புத்தாண்டு என, இன-மத அடையாளத்துடன் அதனைக் குறிப்பிடுவதைத் தவிர்த்து 'இலங்கைப் புத்தாண்டு' என அழைப்பதால் இந்த தேசம் வலிமை கொள்ளும் என உணர்கிறேன் என தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார் என்பதை நினைவூட்டுகின்றோம். 16.04.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago