Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 31 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக 1979ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டபயங்கரவாதத் தடைச் சட்டம், இன்றும் நடைமுறையில் உள்ள ஒரு சட்டமாகும்.இந்த சட்டம் சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த பயங்கரவாத தனிச் சட்டத்தைத் திருத்துவதாக அறிவித்திருந்தது,
இவ்வாறான நிலையில், நாட்டில் சாதாரண பொதுமகன் மீது, பொலிஸாரும், அதிகாரத்தைக் கையிலெடுக்கும் தரப்பினரும் மிகவும் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர். இல்லையேல், தப்பிக்க முயன்றனர். தங்களிடமிருந்து ஆயுதங்களை அபகரிக்க முயன்றனர் என கூறி, பதில் தாக்குதல் நடத்தினோம். அதில் சந்தே நபர் மரணமடைந்து விட்டார் என பொலிஸ் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கிறது.
வாகனத்துக்கான தவணைக் கட்டணத்தை முறையாக செலுத்தாமையால், அந்த வாகனத்தை அபகரிக்க வந்த நபர்கள், வாகன சாரதியை அல்லது உரிமையாளரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை சாதாரண பொதுமகனே, வீடியோவாக எடுத்துப் பதிவேற்றியிருந்தார். அத்துடன், பாதிக்கப்பட்டவருக்காகக் குரல் கொடுத்தார்.
“சாதாரண பொதுமகனால் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது” என்றும் அவ்விடத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்தார். இந்நிலையில், வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில், அங்கு ஒருபடி மேலே நடக்கிறது. போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைது செய்ய சென்ற பொலிஸார், மற்றுமொருவரைப் பிடித்து, அவர் மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி விட்டு, இறுதியில், தவறாக கைது செய்து விட்டோம் என்று விளக்கமளித்துள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகளில் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக, தற்போதைய அரசாங்கங்கள் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கும், இன அல்லது மதக் கருத்துக்களைக் கொண்ட மக்களை அடக்குவதற்கும் இதைப் பயன்படுத்துகின்றன என்பதும் அடங்கும். இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டியை ஒட்டிய நபர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்த அரசியல் கட்சியாக அறியப்படுகிறது.
“அரசாங்கங்கள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் போராட்டத்தின் முன்னாள் மாணவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தின”,“நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற சித்தாந்தம் நிறைய உள்ளது” என்பதை நினைவு படுத்துகின்றோம். “தேசிய மக்கள் சக்தி, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றது. “எனவே, தற்போதைய அரசாங்கம்
எந்த வகையிலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது” என்பதே உண்மையாகும்.
“இனவெறி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்”, இனவெறியைத் தோற்கடிக்க அடக்குமுறையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. “அடக்குமுறை இனவெறியை மேலும் வலுப்படுத்துகிறது” என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.
2025.03.31
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago