Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மற்றுமொரு தடை தாண்டலில் அசட்டையாக இருந்துவிடாதீர்கள்
ஒன்றை கடந்து சென்றுவிட்டதன் பின்னர், அந்தப் பருவத்தைப் பற்றி நினைப்பதில் தவறில்லை, அந்தப் பருவத்துக்குள் மீண்டும் போகமுடியாததை நினைக்கும் போதுதான், எவ்வளவுக்கு எவ்வளவு காலத்தையும் நேரத்தை வீணடித்துவிட்டோமென பலரும் யோசித்துக்கொண்டிருப்பர். அவ்வாறானதொரு பருவம்தான் மாணவப் பருவமாகும்.
முதலாம் தரம் முதல், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரையிலும் பயின்ற மாணவர்கள், பல தடைகளைத் தாண்டி வந்திருப்பர், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், இவ்விரண்டில் சாதாரண தரத்தில் தடையைத் தாண்டியவர்கள், உயர்தரத்துக்குச் சென்று, இன்று (07) பரீட்சைக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.
இரண்டு வருடங்களில் ஆகக் குறைவான மாதங்கள் மட்டுமே பாடசாலைக்குச் சென்று, உரிய காலத்துக்கு அப்பால் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளை வாழ்த்துகிறோம். கொரோனா காலத்தில் வெறுமனே, நிகழ்நிலை (ஒன்லைன்) ஊடாகவே கல்வி பயின்றனர். வகுப்புகளுக்குச் சென்று நேரடியாக கற்பதற்கும் நிகழ்நிலையில் கற்பதற்கு இடையில் கடுமையான வேறுபாடுகள் இருந்திருக்கும்.
குழுவாக இருந்து கலந்துபேசி கற்க முடியாத நிலைமையொன்று ஏற்பட்டிருக்கும். எனினும், தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, காலந்தாழ்த்தி நடத்தப்படும் இப்பரீட்சையில், நல்ல பெறுபேறுகளைப் பெற்று உயர்கல்வியைக் கற்பதற்கான முயற்சியைக் கைவிடக்கூடாது.
பரீட்சைகள் காலந்தாழ்த்தப்படும் போது, பரீட்சார்த்திகள் மனரீதியில் சில தாக்கங்களுக்கு முகங்கொடுத்திருப்பர். வீட்டுக்குள்ளே இருந்து கற்றுவிட்டு, பரீட்சை மண்டபத்துக்குச் செல்லும்போது ஒருவகையான படபடப்புகள் ஏற்படக்கூடும். அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, வெல்லவேண்டும்.
ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதனால், இவ்வாறான நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியம், பரீட்சார்த்திகளுக்கு மட்டுமன்றி ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதேபோல, கொரோனா வைரஸ் தொற்றியிருக்கும் பரீட்சார்த்திகளுக்கென விசேட மையங்களும் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ளன. அந்த மையங்களில் இருப்போரும் மனதளராது, பரீட்சைக்குத் தோற்றி வெற்றிபெறவேண்டும்.
இரண்டு வருடங்களில் ஆகக் கூடுதலான நாட்கள், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல், வீடுகளுக்குள்ளே இருந்துவிட்டு, பரீட்சை மத்திய நிலையங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு பரீட்சார்த்திகளும், சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றவேண்டும். கொரோனா தொற்றிக்கொள்ளுமாயின், அதற்கான மாற்று ஏற்பாடுகளை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும். அது பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும்.
அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது, உரிய நேரத்துக்கு வினாத்தாள் விநியோகிக்கப்படவில்லை, சில பரீட்சை மண்டபங்களில் உரிய நேரத்துக்கு வினாத்தாள் வழங்காது, உரிய நேரத்தில் பெற்றுக்கொண்டுவிட்டனர், மொழியை மாற்றிக்கொடுத்துவிட்டனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் முன்வைக்கப்பட்டன. அவ்வாறான குற்றச்சாட்டுகள் இப்பரீட்சையில் எழாதவகையில் பார்த்துக்கொள்ள வேண்டியது பொறுப்பானவர்களின் கடமையாகும். ஆகையால், பரீட்சைக்கு முகங்கொடுக்கும் அனைவரும் அசட்டையாக இருந்துவிடாமல், வெற்றி பெறவேண்டுமென வாழ்த்துகிறோம். (07.02.2022)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago