Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 09 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 பொதுத்தேர்தல், நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், வேட்புமனுக்களை ஏற்றல், ஒக்டோபர் 11ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே, சுயேட்சை குழுக்கள் பல கட்டுப்பணத்தை கட்டியுள்ளன. அரசியல்கட்சிகளில் பல கட்சிகள், இறுதி வரையிலும் காத்திருக்காமல், வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.
225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, எத்தனை கட்சிகள், எத்தனை சுயேட்சை குழுக்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை பேர் போட்டியிடுக்கின்றனர் என்பது வெள்ளிக்கிழமை (11) தெரிந்துவிடும். அதற்குப் பின்னர், தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 54 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெருமெடுப்பில், பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. எனினும், புதிதாக களமிறங்கும் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் கட்டாயமாக பிரசாரம் செய்தேயாகவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலை மிகவும் அமைதியாகவும் நியாயமாகவும் நடாத்தியமை நாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஜனாதிபதித் தேர்தல் காலத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ கொலைகளோ கலவரங்களோ இடம்பெறவில்லை என்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இலங்கையை நரமாமிசம் உண்பவர்களின் நாடாக சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால், கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அந்தச் சங்கப் பிரதிநிதிகள் அவதானித்த பின்னர், அது மிகவும் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதாக சர்வதேசச் சான்றிதழை வழங்கியுள்ளது.
‘ஜனநாயகமான தேர்தல்’, பொதுத் தேர்தலில் மட்டுமன்றி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் வரையிலும் தொடர்ச்சியாகச் செல்ல வேண்டும். அதற்கான நல்ல ஆரம்பம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உருவாக்கப்பட்டது. அந்த ஆரம்பம் தொடர வேண்டும்.
முன்னாள் அரசியல்வாதிகள் பலர் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிவிட்டனர். இன்னும் சிலர், தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே புதுமுகங்கள் பல களமிறங்கப்பட்டுள்ளன.
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் அடுத்த ஐந்து வருடங்களுக்கு சட்டங்கள் இயற்றப்படும் பாராளுமன்றமாக இருக்கக் கூடாது. தற்போதைய ஜனாதிபதியின் கூற்றுப்படி, இது ஒரு புதிய மறுமலர்ச்சி சகாப்தத்திற்கு வழி வகுக்கும் அறிவொளி மற்றும் முன்மாதிரியான சபையாக இருக்க வேண்டும்.
நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி எதிர்கால நல்ல நிகழ்வுகளை உருவாக்கும் அந்த பேரவையில் படித்த அறிவாளிகளை நியமிப்பது மக்களின் முழுமையான கடமையாகும். கடந்த பாராளுமன்றத்தில் நடந்த பல கசப்பான சம்பவங்களை நினைவில் கொண்டு, கடுமையாக வடிகட்டி, பாராளுமன்றத்துக்கு மிகச்சரியானவர்களை அனுப்பவேண்டிய பொறுப்பு வாக்காளர்களிடமே உள்ளது.
‘ஜனநாயக தேர்தல்’ பொதுத் தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டும். அதனூடாகவே, இலங்கை மீதான சர்வதேச அசிங்கமான நிறத்தை நீக்கி தூய்மையான நாடாக முன்னோக்கிச் செல்வதற்கான ஆரம்பத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
2024.10.09
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .