2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

வாசிப்பும் வாழ்வும்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலக்கியம், அரசியல், வாசிப்பு சார்ந்த உரையாடல்களும் நிகழ்வுகளும் வடக்கு கிழக்கில் மிக உற்சாகமாக நடப்பதும் நடத்துவதற்கான முயற்சிகளும் எதிர்காலத்தின் மீது அதிக நம்பிக்கை தருவதாக உள்ளது.   

வாசிப்பும் உரையாடலும் இடம்பெறும் சமூகத்தில்தான் மானுடத்தின் மேம்பட்ட குணாதிசயங்களான பெண் சமத்துவம், மனித உரிமைகளை மதித்தல், இன ஐக்கியம் போன்ற பன்பட்ட தன்மைகளைக் காணமுடியும்.

நம்நாட்டில் போரும் அதனால் உண்டான இழப்புகளும் பாதிப்புகளும் இதுபோன்ற செயற்பாடுகளிலிருந்து மக்களை மிகத் தொலைவாக்கியிருந்தது. போர் முடிந்து பத்தாண்டுகளாகிவிட்ட நிலையில் ஏற்பாடு செய்யப்படும் வாசிப்பு நிகழ்வுகளும், புத்தகத் திருவிழாக்களும் புதிய நம்பிக்கைகளுடன் மக்கள் பயணிக்கத் தொடங்கியிருப்பதன் சமிக்ஞை. 

இதுபோன்ற செயற்பாடுகளை இளைஞர்கள் ஒழுங்குபடுத்துவதும் பங்கேற்பதும் மிகவும் ஆரோக்கியமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X