2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பெண் நினைத்தால்…

Editorial   / 2019 மார்ச் 15 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாதாரணமாக பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தால் நம்மில் பெரும்பான்மையானோர் எதிர்பார்ப்பது ஒரு அரச உத்தியோகத்தை அல்லது அதற்கு ஈடான ஒரு தனியார் பதவியை! அத்துடன் வீடு, கார், வசதியான வாழ்க்கை, திருமணம். இவ்வளவும் நடந்துவிட்டால் ”செட்டில்” என்ற பெருமிதம்.

ப்ரபோதா எதிரிசூரிய இப்படி எல்லா சாதாரணமானவர்களைப் போலவும் சிந்திக்கவில்லை. இருபத்தி ஐந்தே வயதான ப்ரபோதா வணிகத் துறையில் பட்டப் படிப்பை முடித்ததும் தனது தந்தையின் தொழிலை முன்னேற்ற நினைக்கிறார். தந்தை மஹிந்த எதிரிசூரியவின் தொழில் ஒன்றும் மில்லியன்கள் புழங்கும் பெரும் வர்த்தமாக இருக்கவில்லை.

தந்தையின் சாதாரண சப்பாத்துக்கள் தயாரிக்கும் திறமையை புதிய தொழில்நுட்பத்துடனும் இன்றைய கால தேவையுடனும் இணைத்து மில்லியன்கள் புழங்கத்தக்க தொழியாக மாற்றி வெற்றியும் கண்டிருக்கிறார் ப்ரபோதா.

சூழலுக்குப் பாதகமில்லாத, தோல்களுக்கு எந்தவித உபாதைகளையும் ஏற்படுத்தாத முற்றிலும் இயற்கையான சப்பாத்து உற்பத்தியில் ”செனா ஈகோ” என்ற பத்தரமுல்லையில் இயங்கும் நிறுவனம் இன்று முன்னணியில் உள்ளது. இவர்களது தொழிற்சாலையில் குடும்பத் தலைமை தாங்கும் பெண்களைப் பணியில் அமர்த்தி வித்தியாசத்தை நிலைநாட்டியுள்ளார்கள். இவர்களது உற்பத்திகள் உள்நாட்டில் மட்டுல்ல, ஜப்பான், கொரியாவுக்கும் வேறு பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

சூழலுக்கு பாதகமில்லாத இவர்களது சப்பாத்துக்கள், ஏனைய பொருள்களை வாங்க விரும்பினால், 0773681388 எண்ணுக்கு அழையுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X