Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 25 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பெரிய நீலாவணை சவளக்கடை சம்மாந்துறை காரைதீவு சாய்ந்தமருது அக்கரைப்பற்று நிந்தவூர் மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (25) உணவகங்கள் புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் வங்கிகள் சந்தைகள் போன்றவை வழமை போன்று இயங்கின.
இம்மாவட்டத்தில் வழமை போன்று அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது.
இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
அத்துடன் கல்முனை பொது சந்தை உட்பட அதனை சூழ உள்ள வீதியோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் வியாபார நிலையங்கள் ,சுப்பர்மார்க்கெட்டுகள், பாடசாலைகள் , பாமசிகள் வங்கிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.
எனினும் சில இடங்களில் பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மண்ணைக்காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி ஹர்த்தாலை அனுஸ்டிப்போம் என தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சிவில் செயல்பாட்டாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago