2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியே நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தை, மக்கள் வரவேற்றுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்ரம, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, இந்நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக எதிர்காலத்தில் மாறும் என்றார்.

அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல், முன்னாள் இராஜாங்க அமைச்சரின் அம்பாறை உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தை மக்கள் வரவேற்றுள்ளார்கள் என்றார்.  

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டிருப்பது நம் எல்லோருக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துமெனவும் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரத்தைப் பலப்படுத்துவதோடு, அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .