2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

வைத்தியசாலை ஊழியர்கள் கண்காணிப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் வைத்தியசாலைகளில் இல்லாத உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (27) தெரிவித்தார்.

மாவட்ட மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பதில்லையென பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவித்தார்.

இம் முறைப்பாட்டுக்கமைய, சுகாதார அதிகாரிகள் குழுவினால் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் .

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இரண்டு வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் இல்லாத உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இடமாற்றம் மற்றும் பதவிக் குறைப்பு கடிதமும் அவ்விடத்திலேயே வழங்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார் .

வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இல்லாத உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தொடர்பாக பொதுமக்கள் வைத்தியசாலைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விரைவுத் தகவல் குறியீடு (கியூ.ஆர்) ஊடாகவும், எழுத்து மூலம் அல்லது வாய்மொழி மூலமாகவோ பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X